பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவலூர்த் தீங்கரும்பு 199

அன்னையாருடன் கூடிய எம்பெருமானின் மரகதத் திருமேனி இப்போது பொன்மேனியாகவே காட்சியளித்தது. மரகத மலையில் உதித்து ஒளி வீசி வரும் இளஞாயிறு போலத் தோன்றி இருவரது ஒளியையும்-பொன் ஒளியும் மரகத ஒளியும் கலந்து ஒளிர்கின்ற அந்தக் கலப்பு ஒளியையும்-கண்டாராம்; ‘திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன்’ என்பதால் இது பெறப்படுகின்றது. இருவர் சேர்த்தியால் பிறந்த சமுதாய சோபை என்பது பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக்கியான விளக்கம்.

ஆழ்வார்கள் மூவரும் எம்பெருமானைக் கண்டதும் பக்திப் பெருக்கில் திளைத்துப் போயினர். பொய்கையாழ்வார் தமது பாடலைத் தொடர்ந்து முதல் திருவந்தாதி'யைப் பாடி முடித்தார்; பூதத்தாழ்வார் தமது பாடல் தொடங்கி ‘இரண்டாம் திருவந்தாதியை நிறைவு செய்தார்; பேயாழ்வார் ‘மூன்றாம் திருவந்தாதியைத் தலைக்காட்டினார். இங்ஙனம் ‘குருபரம்பரை’ என்ற நூல் கூறுகின்றது. அஞ்ஞான இருள் அகலப்பெறின் இறைவன் காட்சியளிப்பான் என்ற உண்மையை முதலாழ் வார்களின் வரலாற்றால் அறிகின்றோம்.

“நீயும் திருமகளும் நின்றாயால் குன்றெடுத்துப் பாயும் பனிமறுத்த பண்பாளா-வாசல் கடைகழியா உள்புகாக் காமர்பூங் கோவல்

இடைகழியே பற்றி இனி.’

(பாயும்-சொரிகின்ற; பாயும் பனி-மழை; காமர்பூ-விரும்பத் தக்க வாசல்கடை

- திருவாயிலுக்கு வெளியே, உள்புகா-உள்ளே புகாமலும்; இடைகழி - நடுக்

கட்டு; பற்றி - விரும்பி)

என்ற பொய்கையாழ்வாரின் பாசுரமும் மேற்கண்ட நிகழ்ச்சியை எடுத்துரைப்பதாக உள்ளது.

இங்ஙனம் முதலாழ்வார்கள் மூவரும் ஒருவரையொருவர் சந்தித்து அந்தாதிகள் அருளிச்செய்த திருக்கோவலூரை நினைந்து,

21. முத. திருவந் - 86