பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

“பாவரும் தமிழால் பேர்பெறு மனுவல் பாவலர் பாதிநாள் இரவில்

மூவரும் நெருக்கி மொழிவிளக்(கு) ஏற்றி

முகுந்தனைத் தொழுதநன் னாடு.”

(முகுந்தன்-திருமால்)

என்று போற்றிப் புகழ்வர் வில்லிபுத்துராரின் புதல்வர்வ ரந்த ரு வார். வேதாந்த தேசிகரும்,

‘பாட்டுக்(கு) உரிய பழையவர்

மூவரைப் பண்(டு) ஒருகால் மாட்டுக்(கு) அருள்தரும் மாயன்

மலிந்து வருத்துதலால் நாட்டுக்(கு) இருள்செக நான்மறை

அந்தி நடைவிளங்க வீட்டுக்(கு) இடைகழிக் கேவெளி

காட்டும்.அம் மெய்விளக்கே.”

(பழையவர்-முதலாழ்வார்கள்: மலிந்து-அதிகமாக வருத்துதல் - நெருக்குதல்; மாடு-செல்வமாகிய ஆன்மா, மாயன்-திருமால் :

இருள்செக-அஞ்ஞானம் நீங்க; நான்மறை அந்தி-உபநிடதம்; நடைவழி, வெளி-உபாயங்கள்)

என்று இந்நிகழ்ச்சியைப் பாராட்டியுள்ளமை காண்க.

இந்த நினைவுகள் நம் மனத்தில் எழுந்த வண்ணம் ஊரின் நடுவேயுள்ள திருக்கோயிலை நண்ணுகின்றோம். கோயிலின் முன்னும் பின்னுமாக இரண்டு கோபுரங்கள் உள்ளன. ஆனால், சந்நிதித் தெருவின் கீழ்க் கோடியில் பதினொரு நிலைகளுடன் ஒரு பெரிய கோபுரம் உள்ளது. அதனை நோக்க இவ்விரண்டும் சிறிய கோபுரங்களே. அந்தப் பெரிய கோபுரத்தின் அருகில்தான் தேர் முட்டி உள்ளது. இவற்றைத் தவிர மொட்டைக் கோபுரத்தையும் காண்கின்றோம். பேயாழ்வார் இதனை ஒரே இரவில் கட்டுவதாக முடிவு செய்துகொண்டு கட்டினதாகவும், கோபுரப்பணி நிறைவு பெறுவதற்கு முன்னர் விடிந்து விட்டதால் கோபுர வேலை அரை குறையாக நின்று விட்டதென்றும் செவிவழிச் செய்தியால் அறிகின்றோம்.

22. வில்லிபாரம் - சிறப்புப் பாயிரம் -9, 23. தே. பிரபந் - 89.