பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

(ஒண்மிதி-ஒரடி இட்டு; புனல்-ஆவரன நீர்; அவுணன்-மாபலி, எண்மதி - நினைத்திருக்கும் எண்ணம்; விசும்பு-ஆகாயம்; மதி.சந்திரன், தாரகை . நட்சத்திரம்; மலர் புரையும் - தாமரை மலரையொத்த)

என்ற திருமங்கையாழ்வாரின் பாசுரத்தைப் பாடிச் சேவிக்கின் றோம்.

அடுத்து, பிராகாரத்தில் கோயிலை வலம் வருகின்றோம். முதல் பிராகாரத்தின் முகப்பிலேயே துர்க்கையின் திருவுருவத் தைக் காண்கின்றோம்; சந்நிதி பிராகாரத்திற்குள் நுழைந்ததும் இடப்புறத்தில் இத்தேவியை காண்கின்றோம். இத்திருக் கோயிலைக் காவல் புரிகைக்காக விந்தியமலையைச் சார்ந்த அடவியில் இவள் தவம் புரிந்ததாகவும், திரிவிக்கிரமன் ஆணையால் அவள் காவல் புரியும் பணியை ஏற்றதாகவும் புராண வரலாறு கூறும். பெரும்பாலும் துர்க்கையின் சிலையைத் திருமால் ஆலயங்களில் காண்பது இல்லை. எனினும், ஈண்டு அதனைக் காண்கின்றோம். துர்க்கை காவல் புரிவதைத் திருமங்கையாழ்வாரே தமது பாசுரங்களில் குறிப்பிடுகின்றார்.

‘வியன்கலை எண்தோளினாள் விளக்கு செல்வச் செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும்

திருக்கோவ லூர்’

(வியன்கலை-அழகிய மானை வாகனமாயுடையவனாய்; எண்தோளினான் . எட்டுத் தோள்களையுடையவனாய்)

என்ற பெரிய திருமொழிப் பாசுரப் பகுதியாலும்,

“கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட விந்தம் மேய

கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி பொற்புடைய மலையரையன் பணிய நின்ற

பூங்கோவ லூர்தோழுதும் போது நெஞ்சே.

(விந்தம்-விந்தியமலை; மேய-வாழ்ந்தவளாய்; கன்னி-துர்க்கை; மலையரை யன் - மலையமான் சந்நதியினர்)

, 26

என்ற திருநெடுந்தாண்டகப் பாசுரப் பகுதியாலும் இதனை அறியலாம். இந்தத் துர்க்கா தேவிக்குச் சிறப்பான பூசனை முதலியவை உண்டு; இவள் மிக்க வரப்பிரசாதி என்ற நம்பிக்கை இன்றும் இருந்து வருகின்றது. இந்தப் பிராகாரத்திலேயே

25. பெரி. திரு . 2. 10 : 6 26. திருநெடுந் - 7.