பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

மலர்களைக் கொண்டு வணங்கினால் நம் தீவினைகள் அகன்றோடிப்போய்விடும்’ என்று கூறும் அவர் கொள்கையில் ஆழங்கால் பட்டு நிற்கின்றோம்.

அர்ச்சகரிடம் தீர்த்தம் துளபம் பெற்று, சடகோபம் சாத்தப்பெற்று இறையதுபவம் நிறைந்து வழியும் நிலையுடன் கருவறையை விட்டு வெளி வருகின்றோம். பிராகாரத்தின் ஒர் அமைதியான இடத்தில் அமர்கின்றோம். அப்பொழுது திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் அவர்களின்,

“உரைகலந்த நூலெல்லாம் ஓதி உணர்ந்தாலும் பிரைகலந்த பால்போல் பிறிதாம்-தரையில் திருவெஃகா மாயனுக்கே சீர்உறவாம் தங்கள் உருவெஃகா உள்ளத்தி னோர்க்கு”

(ஒதி-கற்று; பிறிது ஆம்-திரியும் தன்மையாதாய் விடும்; மாயன் ஆச்சரிய சக்தி

யையுடையவன்; சீர்-சிறந்த, தங்கள் உரு-தமது சொரூபம், வெஃகா -

விரும்பியறியாதர்

என்ற பாசுரம் நினைவுக்கு வர அதனையும் ஒதி பக்தியின் கொடுமுடியை எட்டிய உணர்ச்சி வயத்தராகின்றோம். சிறிது நேரம் கழித்து அட்டபுயகரத்தானைச் சேவிக்கும் விருப்பால் அவன் வீற்றிருக்கும் திருக்கோயிலை நோக்கி நடைகட்டு கின்றோம்.

20. மூன்.திருவந்-76 21. நூற். திருப். அந்-82.