பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

என்ற பாசுரப்பகுதி திருமேனியின்பால் அவளுடைய ஈடுபாட்டினைக் காட்டுகின்றது. ‘கால் ஆழும், நெஞ்சு அழியும், கண்சுழலும்’ என்ற அவளுடைய நிலையைக் காண்கின்றோம்.

எம்பெருமானுடைய திருமேனியின் இயற்கையழகிலும் செயற்கை அழகிலும் தன்னுடைய உள்ளத்தைப் பறிகொடுத்து விடுகின்றாள் பரகாலநாயகி.

“முழுசிவண்டு) ஆடிய தண்துழாயின்

மொய்ம்மலர்க் கண்ணியும் மேனிஅம்சாந்(து)

இழுசியிகோலம் இருந்த வாறும்

எங்ஙனம் சொல்லுகேன்! ஓவிநல்லார்,

எழுதிய தாமரை அன்னகண்ணும்

ஏந்தெழில் ஆகமும் தோளும்வாயும்,

> * > 18

அழகியதாம்

(முழுசி-(தேனில்) மூழ்கி; மொய்ம்மலர் கண்ணி-நெருங்கத் தொடுக்கப்பெற்ற மாலை, சாந்து-சந்தனம்; ஒவிநல்லார்-ஒவியர், ஏந்து எழில்-மிக்க அழகு ஆகம் - மார்பு)

என்று அவள் பேசுகின்ற பேச்சினால் இதனை அறிகின்றோம். தேன் ஒழுகும் திருத்துழாய் மாலையைச் சாத்திக்கொண்டிருந்த அழகும், சந்தனக் காப்பால் பொலிந்த அழகும் என்னே! அன்றியும், அவருடைய திருக்கண்களும், திருமார்பும், திருத்தோள்களும், திருப்பவளமும் (உதடுகள்) ஒவியவல்லாரால் எழுதப் பெற்றவை போன்று யாதொரு குறையும் கூறவொண்ணாதபடி அழகு விஞ்சிஇருந்தன’ என்று ஈடுபட்டுப் பேசுகின்றாள் ஆழ்வார் நாயகி.

“என் அரங்கத்து இன்னமுதர் குழல்அழகர் வாய்அழகர்

கண்அழகர் கொப்பூழில் எழுகமலப் பூஅழகர்”

(குழல்-கூந்தல்; கொப்பூ-நாபி)

17. பெரி. திருவந்-34. 18. பெரி. திரு-2.8:7. 19. நாச். திரு. 11:2.