பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகளந்தபெருமாள் 45

இங்ஙனம் பல ஒற்றுமைகளைக் கண்டு மகிழலாம்.’ இச்சந்நிதி எம்பெருமானைத் திருமங்கை மன்னன் மட்டிலுமே ‘உலகம் ஏத்தும் காரகத்தாய்!’ என்று மூன்று சொற்கள் கொண்ட ஒரே தொடரால் மங்களா சாசனம் செய்துள்ளார். தெற்கு நோக்கிய திருமுக மண்டலங் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பத்மா மணி நாச்சியாருடன் சேவை சாதிக்கும் கருணாகரப் பெருமாளை வணங்குகின்றோம். இந்த நிலையில் திவ்விய கவியின் பாசுரம் நம் சிந்தையில் எழுகின்றது.

“ஒராதார் கல்வி உடையேம்; குலம்உடையேம்; ஆராதனமுடையேம்; யாம் என்று-சீர்ஆயன் பூங்கா ரகம்காணப் போதுவார் தாள்தலைமேல் தாங்கார் அகங்காரத் தால்’

(ஒராதார்.ஆராயாதவர்; ஆராதனம்-இறைவனுக்குப் படைத்தல்; ஆயன் - கண்ணன், பூ, காரகம்-அழகிய காரகம்; போதுவார்-வருவார்; தாள்-திருவடி)

என்ற பாசுரத்தை ஒதுகின்றோம். இங்ஙனம் ஒதுங்கால் ‘வஞ்ச முக்கறும்புகள்’ ‘நம்மேல் என்றும் தலைக்காட்டலாகாது’ என்று எண்ணியவண்ணம் எம்பெருமானை வழிபடுகின்றோம். அடுத்து, அடுத்த சந்திதியை நாடி வருகின்றோம்.

திருக்கார்வானம்: இந்தச் சந்நிதி உலகளந்த பெருமாள் திருக்கோயிலின் நுழைவாயிலைக் கடந்தவுடன் வலப்புறமாக வெளிப் பிராகாரத்தில் அமைந்துள்ளது. மேகத்தின் தன்மைகள் யாவும் இத்தலத்து எம்பெருமானிடத்தும் அநுசந்திக்கத் தக்கவையாக இருக்கும். இந்த எம்பெருமானைத் திருமங்கை யாழ்வார் மட்டிலும் ‘கார்வானத்து உள்ளாய்!” என்ற சொற் றொடரால் மங்களாசாசனம் செய்துள்ளார். நின்ற திருக் கோலத்தில் மேற்கே திருமுக மண்டலங்கொண்டு கமலவல்லி நாச்சியாருடன் சேவை சாதிக்கும் கள்வன் எம்பெருமானை வணங்குகின்றோம்.

“ தாலேலோ என்று ஆய்ச்சி தாலாட்டித் தன்முலைப்பா லாலே எவ்வாறு பசியாற்றினாள்?-மாலே! பூங் கார்வானத்து உள்ளாய்! கடலோடும் வெற்போடும் பார்வானம் உண்டாய்நீ பண்டு.’

17. விரிவினை ‘திவ்வியார்த் தீபிகை-திருநெடுந்-8 (உரை காண்க.) 18. திருநெடுந்-8, 19. நூற். திருப். அந்-83. 20. திருநெடுந்-8. 21. நூற். திருப். அந்-84.