பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

மாவலியை அடக்குவதற்கு எம்பெருமான் திரிவிக்கிரமனாக வளர்ந்த நிலையை மனக்கண்ணால் கண்டு இங்ஙனம் கூறிய தாகவும் கொள்ளலாம். திருமழிசையாழ்வாரின்,

‘நன்றி ருந்து யோகநீதி

நண்ணு வார்கள் சிந்தையுள் சென்றி ருந்து தீவினைகள்

தீர்த்த தேவ தேவனே குன்றி ருந்த மாடநீடு

பாடகத்தும் ஊரகத்தும் நின்றி ருந்து வெஃகணைக்

கிடந்த தென்ன நீர்மையே.”

(நன்று இருந்து-யோகப் பயிற்சிக்கு உரிய ஆசனத்தில் அமர்ந்து: சென்று இருந்து

- நுழைந்து இருந்து; குன்று இருந்த-மிக உயர்ந்த நீடுமாடம்-உயர்ந்த மாளிகைகள்: நீர்மை - தன்மை)

என்ற பாசுரத்தை ஒதி எம்பெருமானைச் சேவிக்கின்றோம்.

திரவிக்கிரம் சேவை கற்பனையில் நம்மை அந்த அவதாரம் எடுத்த காலத்திற்கே கொண்டு செலுத்தி விடுகின்றது. நம்மை மறந்த நிலையில் அந்த மூர்த்தியின் திருமேனி அழகில் ஈடுபடுகின்றோம். அந்த அவதாரத் திருமேனி அழகில் திருமங்கையாழ்வார் ஆழங்கால் பட்டுப் பாடியருளிய பாசுரம் நம் சிந்தையில் குமிழியிட்டெழுகின்றது.

“ஒண்மிதியில் புனல்உருவி ஒருகால் நிற்ப

ஒருகாலும் காமருசீர் அவுணன் உள்ளத்து எண்மதியும் கடந்துஅண்டம் மீது போகி

இருவிசும்பி னுடுபோய் எழுந்து மேலைத் தண்மதியும் கதிரவனும் தவிர ஓடி

தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை

மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே.”

(ஒண்மிதி-ஒரடியில்; புனல்-ஆவரனநீர் கால்-திருவடி, ஒருகாலும்-மற்றொரு

திருவடி, அவுணன்-மாவலி; விசும்பு-ஆகாயம்; தவிர ஒடி-கடந்து சென்று; தாரகை நட்சத்திர மண்டலம்: மலர்புரையும்-தாமரை மலரை ஒத்த)

31. திருச். விருத்-63. 32. திருநெடுந் -5.