பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தொல்காப்பிய ஆராய்ச்சி செல்வதை அடிப்படையாக வைத்து இலக்கியங்கள் இயற்றுவதுண்டு. அவ்வாறு பிரிவதற்குரிய காரணங்கள் ஓதல், தூது, பகை என்பனவாம். உயர் கல்வி கற்பதற்காகவும், சந்து செய்விக்கும் அரசியல் தூதுவராகவும், நாடு காக்கும் போர் மேற் கொண்டும் பிரிதல் ஆடவர்க்கு இயல்பே. நாடு கடந்து வெளி நாடு செல்கின்றவர் நுண் மாண் நுழை புலன் மிக்கோராய் இருத்தல் வேண்டும். தம் நாட்டில் பெற முடியாத கல்வியை வெளி நாட்டில் பெறச் செல்வோர் நாட்டு மக்களில் உயர்ந் தோராகத் தானே இருத்தல் வேண்டும். தூது செல்வோரும் அறிவாலும், உருவாலும், ஆராய்ந்த கல்வியாலும் சிறந்தோராக இருத்தல் இன்றியமை யாதது. ஆகவே இலக்கியங்களில் கல்வியின் பொருட்டுப் பிரிவோரையும்,தூதின் பொருட்டுப் பிரிவோரையும் பாடற் பொருளாகக் கொள்ளுங்கால் அவர்கள் எல்லா வகையிலும் யாவரினும் உயர்ந் தோராகக் காட்டுதல் வேண்டும் என்பது ஆசிரியர் கருத்து. ஆதலின், " ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன" என்றார். ஆனால் உரையாசிரியர்களில் சிலர் உயர்ந்தோர் என்பதற்கு முதல் இரு வருணத்தார் (அந்தணர், அரசர்) என்றும், மூன்று வருணத்தார் (அந்தணர். அரசர், வணிகர்) என்றும் பொருள் கூறியுள்ளனர். உயர்ந்தோ ரெனக் கூறலின் வேளாளரை ஒழிந்தோர் என்றுணர்க" என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். முற்றிலும் பொருந்தா உரை கூறித் தொல்காப்பியத்தை இழி நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர் உரையாசிரியர்கள். உரையாசிரியர் காலத்தில் ஆரிய முறையாம் நால்வகை வருண நெறி