பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

ஒதுக்கினர். விட்டான மைக்கேல்? இல்லை. துரத்திலுள்ள மாஸ்கோவிற்கு நடந்தே சென்றான். தன் குல நிலையை ஒளித்தான். உண்மை கசப்பல்லவா?
ஆகவே, சிறு நிலமுடையோன்போல் நடித்தான். ஸ்லாவணிக்-கிரேக்க-லத்தீன் கலைக் கழகத்தில் சேர்ந்துவிட்டான். முன்பிருந்ததை விடக் கடினமாக இருந்தது வாழ்க்கை. நாளேக்கு மூன்று 'கொபெக்'கில் காலந்தள்ளினான். ஒரு மாதமா? இரு திங்களா இப்படி? ஐந்தாண்டுக்காலம் இத்துன்பம். நண்பர்கள் சும்மா இருப்பார்களா? எளியவனே ஏளனஞ் செய்வது பிறவிக்குணமல்லவா? பள்ளி மாணவர்களின் ஏளனத்திற்கும் குறைவில்லை. ஒன்றுஞ் செய்யவில்லையா மைக்கேல்? செய்யாமல் என்ன? கருமமே கண்ணாயினார். படிப்பே எல்லாமாயினார். கணக்குத் தீர்க்கும் வெட்டி வேலையில் நேரத்தை வீணாக்க வில்லை. சிந்தனையைச் சிதறடிக்கவில்லை. விளைவு? நன்றாகத் தேறினர் ஐந்தாம் ஆண்டில்.
விஞ்ஞானக் கழகத்தில் மேற்படிப்பிற்கு இடம் கிடைத்தது. மேலும் வளர்ந்தார். பல துறைகளில் தேறினர்; மேதையானர்; புகழ் பெற்றார். எனினும் விண்ணிலே பறக்கவில்லை. மண்ணிலே செய்ய வேண்டிய பணியை உணர்ந்தார். தாம் பெற்ற துன்பம் துண்டிக்கப்பட வேண்டும் என்று தெளிந்தார். தாம் பெற்ற இன்பம் வையகமெல்லாம் பெறத் திட்டமிட்டார். பலரது ஒத்துழைப்பைப் பெற்றார்.ஆட்சியாளரின் ஆதரவைப் பெற்றர். மாஸ்கோ