பக்கம்:நாள் மலர்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் வகையின் அயல்மொழிப் பெயர்கள் சோசலிசம் இரண்டு கறவைகள் உன்னிடம் இருந்தால் அண்டை வீட்டானுக் கொன் றளித்தல் “சோசலிசம். காப்டலிசம் கறவைகள் இரண்டில் கடிதொன்றை விற்றுக் காளை வாங்குவது "காப்டலிசமாம், கம்யூனிசம் அவ்விரண்டினையும் ஆள்வார்க்கு விற்றுத் தேவைக்குப் பால்பெறச் செப்பல் "கம்யூனிசம்.' பாசிசம் பகர் இரு கறவையைப் பறித்த ஆள் வோரிடம் தொகைதந்து பால் பெறச் சொல்வது "பாசிசம்."" நாசிசம் உரியவன் தன்னை ஒழித்தே அவனின் கறவையிரண்டையும் கைப்பற்றல் நாசிசம்." நியூடிலிசம் இரண்டு கறவையால் திரண்டபால் அனைத்தையும் சாக்கடைக் காக்குவது தான் “நியூடலிசம்." அதனை இவற்றில் ஏற்பாய் அதனை உன் நாட்டுக் காக்குக தோழனே! 20 குயில் 1-7-47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/22&oldid=1524965" இலிருந்து மீள்விக்கப்பட்டது