பக்கம்:நாவல் பழம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாவல் பழம்!
ராசீயின் நாவல்கள்
ஒரு விமர்சனம்
நா. காமராசன்


கடுக்கன்களைப் போன்ற பொன்னிறப் பூக்கள் காற்றிலே இலையெல்லாம் செவியாக மாறிக் காது குத்திக் கொண்டது போல் பூச்சுமையில் கனவுகளை அபிநயிக்கும் ஒரு புளிய மரத்தோப்பு,


எனது "தேவதேவி”யின் ஊருக்கு முன்னிடத்தில் மிகப் பெரிய ஒரு காலணியை உருவாக்கத் தேவையான நிலப் பரப்பில் நான் ஒரு நாவல் பழக்காரியோடு பேரம் பேசிக் கொண்டிருந்தேன். விலை திகையவில்லை. இயற்கை அரசியை ரசிக்கும் வெறியில் விழிகள் திசைகளைத் துருவுகின்றன. தோப்பு முழுவதும் அடிக்கு ஒரு புளியமரம்.

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/7&oldid=1064527" இலிருந்து மீள்விக்கப்பட்டது