பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

நிலையும் நினைப்பும்



குரு:--ராஜன்! போருக்குக் கிளம்புவதாகக் கேள்விப்பட்டேன்!

அரச:--ஆம்! குருதேவா! அதற்குத் தங்கள் அனுக்கிரகம் வேண்டும்.

குரு:--ராஜன்! அப்படியானால் எந்தப் பக்கம் படையெடுக்க உத்தேசம்?

"உத்தேசமென்ன, ஸ்வாமி, தங்கள் உபதேசம், மிதிலாபுரி மீது” என்று மன்னன் கூறினான்.

உடனே குரு “யோசித்துச் செய். வடகிழக்கில் வால் நட்சத்திரம் தோன்றியிருக்கிறது. மன்னனுக்கு ஆகாது என்பார்கள். மேலும் இம்மாதம் நவக்கிரகங்கள் சரியாயில்லை; திசை மாறியிருக்கின்றன. ஆகையால் போர் தொடங்கு முன், ஓர் யாகம் நடத்தவேண்டும். அந்த வேள்வி வெற்றிகரமாக முடிந்தால்தான் உமக்குப் போரில் வெற்றி கிட்டும்' என்று கூறினார். மன்னன் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான். யாகம் நடந்தது. நெய்யை அக்கினியிலிட்டு வேதம் ஓதினர். ஓமப் புகை கிளம்பியது; ஆடு, கோழி அறுக்கப்பட்டது. பிறகுதான் நமது மூதாதையர்களுக்குப் போரில் வெற்றி கிட்டியது என்பதாக எங்காவது பாடல்களைக் காட்டமுடியுமா? அத்தகைய காட்டமுடியாத நிலை தமிழகத்தில் எத்தகைய நினைப்பைத் தந்திருக்கும். இயற்கையாகவே நல்ல உயர்ந்த நினைப்புகளைத் தந்தது. இடைக்காலத்தில் வந்து புகுந்த யாகம், யோகம், மாகாளி, திரிசூலம், ஜெபமாலை, கமண்டலம் ஆகியவைகள் தாழ்ந்த நினைப்-