பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

நிலையும் நினைப்பும்


சர்க்கார் சாந்தி பருவ ஆராய்ச்சிச் செய்யப் போகிறார்கள் என்று பத்திரிகையில் படித்திருக்கிறோமே அது நினைப்பு உயர்ந்திருப்பதைக் காட்டுகிறதா அல்லது தாழ்ந்திருப்பதைக் காட்டுகிறதா? நினைப்பு தாழ்ந்திருந்தால் ஏன் நினைப்பு தாழ்ந்திருக்க வேண் டும்? மனதிலே உள்ள தளைகள் நீக்கப்பட்டு விட்டால் நினைப்பு இப்படி கெடுமா? படித்தவர்கள் மனதிலேயும் தளைகள் இருக்கின்றனவே! அவைகளை நீக்கப் பல்கலைக் கழகத்தார் என்ன திட்டத்தை வைத்திருக்கிறார்கள்?

துணைவேந்தர் இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்திருந்தால் நிச்சயமாக நான் அவரைக் கேட்டுக்கொண்டிருப்பேன். அவரால் சட்டம் இயற்ற முடியும்; சர்க்காரையே உண்டாக்க முடியும். அவர் சர்க்காரின் கட்டுத்திட்டங்களுக்கு அடங்கி சர்க்காருக்காக மக்கள் நலனை மறக்கிறார். மாணவர்களுக்கு அறிவுச் சுதந்திரத்தை மறுக்கும் நிர்பந்தத்திலிருக்கிறார். அவர் துணிந்து மாணவர்களுக்கு பகுத்தறிவூட்டும் பாடத்திட்டத்தை வகுக்கலாம். வேண்டுமானால் சர்க்கார் அறிஞர் இரத்தினசாமியைத் துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கலாம்; நீக்கட்டும், தமிழ்நாடு துணைவேந்தர் துணை நிற்கும். கல்வி மந்திரியார் மனமிருந்தால் சரியான ஒரு திட்டம் வகுக்கலாம். மாணவர்களிடம் படிப்பு இருக்கிறது. படிப்பை பாமரர்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் திட்டம் வகுக்கப்பட வில்லை. சமுதாயத்திற்கு உழைக்கவேண்டும் என்ற ஆர்வத்திலுள்ள மாணவர்கள் கிராமாந்திரங்களுக்-