பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

67


முதுமை வரும்பொழுது மனதைத்தான் பக்குவப்படுத்தி மகிழ்ச்சி பெறத் தெரிய வேண்டும். அதுதான் இளமையாக இருப்பதின் இனிய ரகசியமாகும்.

எப்படி சமாளிப்பது?

(அ) கண்களும் பார்வையும்:

கண்கள் பார்க்கும் சக்தியை இழக்கின்றன என்பது முதுமையின் சதிதான். அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

இளமைக் காலத்தில் கண்ணானது, அருகிலிருக்கும் பொருளையும், தூரத்திலிருக்கும் பொருட்களையும், எந்தவிதமான கஷடமுமின்றி பார்க்கும் சக்தியைப் பெற்றிருக்கிறது. அதற்குக் காரணம் அவ்வாறு பார்க்கும் சக்திக்கேற்றவாறு விழிப்பாவை உருளும் முறைமை தான்.

கண்ணில் உள்ள கண்மணி என்னும் லென்சுப் பகுதியானது. மிகவும் நுண்ணிய தசைகளால் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. அவை நினைவுக் கேற்றவாறு மேலும் கீழும் முன்னும் பின்னும் விழிப்பாவை நகர்வதற்கேற்றவாறு, தசைப் பகுதிகளை இயக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன.

வயது ஆக ஆக, லென்சுப் பகுதியானது நீண்டு சுருங்கும் நெகிழ்ச்சித் தன்மையை (elastiicity) இழந்து விடுகிறது. தசைகள் இழுத்து விடும் தன்மையும் மாறிவிடுகிறது. தசை இழுப்புகள் அந்த நேர்த்தியான சக்தியை இழக்க இழக்க, லென்சின் அரிய பணி அருகிப் போகின்றன.

அதனால் அருகில் உள்ள பொருட்கள் பார்வைக்குப் படாமலும், தூரத்துப்பொருட்கள் பார்வைக்குத் தெரியாமலும்