பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சிறப்பு நூலகங்கள் அறிவை ஆக்கப் பணிகளுக்குத் திருப்பி விடுவது சிறப்பு நூலகங்களின் (Special Libraries) கடமையாகும். அமெரிக்காவில் தொழில் நுட்ப முன்னேற்றமும், தொழில் வளர்ச்சியும் வியக்கத்தக்க வகையில் ஏற்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப அறிவும் கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டே வருகிறது. இந்த அறிவை ஆக்கப்பணிகளில் செலுத்த வேண்டிய புதிய பொறுப்பும் ஏற்பட்டுள்ளது. இந்தப் பெரும் பொறுப்பை நிறைவேற்றுவதில் சிறப்பு நூலகங்கள் முதலிடம் பெற்று இலங்குகின்றன. விஞ்ஞான -தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர்கள் யாவரும் சிறப்பு நூலகங்களையே நம்பியிருக்கிருர்கள். அதே போன்று. வாணிக நிருவாகத்தினரும். தொழில் நிறுவனத்தினரும், வழக்குரைஞர்கள் போன்ற தொழிலினரும் நிறுவன அமைப்பாளர்களும் தங்கள் அலுவல்களைச் செவ்வனே செய்வதற்குச் சிறப்பு நூலகங்களின் துணையையே நாடு கின்ருர்கள். பல்வேறு துறைகளில் ஈடுபட்டு, அவரவர் துறையில் ஏற்பட்டுவரும் அன்ரு ட வளர்ச்சிகளையும், புதிய கண்டுபிடிப்புக்கள் பற்றிய தகவல்களையும் அறிய விரும்பும் தனிப்பட்டவர்களும், தொகுதியினரும் சிறப்பு நூலகங் களின் உதவியையே தேடுகின்றனர். அறிவியலின் சிறப்புத் துறைகளைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் சேகரித்து. முறையாகத் தொகுத்து, சீராக வகைப்படுத்தித் தேவை