பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பெரும் பெயர்ப் பாண்டில்

பாண்டிமாதேவியார் உறையும் கருவறைக்குச் சென்று விட்ட புலவர், தேவியாரைக்)காணவேண்டும் என்ற தன் விருப்பத்தை, ஆங்குள்ள ஏவல் மகளிர்பால் கூற, அவர்கள் சென்று, தேவியாரிடம் கூற, அவர் புலவரை வரவேற்க ஆர்வமோடு இசைய, அவ்விசைவினை ஏவல் மகளிர் அறிவித்து, 'தேவியார் பள்ளியறைக்கண் உள்ளார்; சென்று காண்பீராக’’ என வழிவிட, புலவர் பள்ளியறைக்குள்

சென்றார்.

ஆங்கு அவர் கண்ணில் பட்ட முதல் பொருள் வெண்ணிறக்கட்டில், தந்தந்தால் ஆனது. முதிரா இளம் யானையைக் கொன்று கொண்டு வந்த தந்தம் அன்று. யானைகளின் வாழ்நாள் நாற்பத்தெட்டு ஆண்டுகள் என்ப. அந்த முழுநாளும் வ ழ் ந் து இறந்துபோன யானையின் தந்தம். காட்டில் வறிதே அலைந்து திரிந்து மாண்டுபோன யானையின் தந்தம் அன்று. உரம் ஏறி உடல் நலம் வாயா யானையின் தந்தமும் அன்று. போர்முரசோ எனக் காண்பவர் கருதுதற்கேற்றகால்களையும். அதற்கு ஏற்ப வலுவேறிய பருஉடலையும் உடைய யானையின் தந்தம். புள்ளிகள் நிறைந்த மத்தகம் உடைமையால் அழகு பெற்ற யானையின் தந்தம். போரில் வெற்றியல்லது தோல்விகானா வீறுடைமை யால் களம்புகுந்து வேலேறுண்டு இறந்துபோன யானையின் தந்தம். அதன் உடலிலிருந்துதான்ே இற்று வீழ்ந்து விட்ட தந்தம்.

67