பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


யும், கோபமும் உக்கிரகதி பெற்றன.

"அத்தான்! எந்த முறையிலடி, அத்தான்? மரியாதையா அவனை மறந்துவிடு"

"முடியாது. நான் அவரைக்காதலிக்கிறேன்."

"காதல்! காலேஜுக்குப் படிக்கப் போறேன், போறேன்னுட்டு, இந்தக் காதலைத்தான் கத்துக்கிட்டு வந்தியா?"

"அப்பா எனது இஷ்டத்துக்குமாறாக நீங்கள் எதுவும் செய்ய முடியாது!"

"நான் உயிரோடிருக்கிறவரையில் இந்த வீட்டில் என் இஷ்டத்தை மீறி எதுவும் நடக்க முடியாது. தெரியுமா?"

"அதையும்தான் பார்க்கப் போகிறேன். கல்யாணம் செய்து கொள்ளப் போவது நான் தானே ஒழிய, நீங்களல்ல. எனது சுகதுக்கங்களைக் கவனித்துக்கொள்ள எனக்குத் தெரியும் உங்களுடைய பணத்தாசைக்கும், பதவியாசைக்கும் பயந்து, நான் என் வாழ்வைப் பலிகொடுக்க மாட்டேன்."

"என்னடி, பிரசங்கம் பண்றே ? அந்தப் பயல் சங்கர் தான் பிரசங்கம் பண்ணிப் பண்ணிக் குட்டிச்சுவராப் போறான்னா, நீவேறெஆரம்பிச்சிட்டியா? மரியாதையாப் போ உள்ளே. வீணா என் கோபத்தைக் கிளறிக் கொண்டிராதே" என்று முகமும் உதடுகளும் சிவந்து கனன்று துடி துடிக்கச் சீறி விழுந்தார் தாதுலிங்க முதலியார்.

மகளுக்கும் கணவனுக்கும் நடந்த வாக்குவாதத்தைக் கேட்டு, திகிலும் திகைப்பும் அடைந்து கல்லாய்ச் சமைந்து நின்ற தர்மாம்பாள், இன்னது செய்வதெனத் தெரியாமல் வாயடைத்து மூச்சடைத்து நின்றாள்.

உணர்ச்சியின் உத்வேகத்தோடு தந்தையின் சுடு சொற்களைத் தூக்கியெறிந்து பேசிநின்ற கமலாவால்,