பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119


நகைகளையும் அழுது தொலைச்சேன். அத்தோடு விட்டானா? ஜவுளி நூல்கட்டுப் பாக்கி ஆறாயிரத்துச் சொச்சத்துக்கும் வக்கீலை வச்சி நோட்டீஸ் வேறே குடுத்து, என் மானத்தை வாங்கினான். அந்த ஈவிரக்கமற்றவனுக்கு என் ஜவுளியையெல்லாம் குறைஞ்ச விலைக்கு வித்து அடைச்சேன் அவன் விளங்குவானா? .

தூக்கத்தில் அவரது மகன் ஆறுமுகம் ஏதோ முனகிய புலம்புவது காதில் விழுந்தது; அவரது மனைவி, "என்னடா ஆறுமுகம்? தூங்கு" என்று தூக்கக் கலக்கத்தில் கூறிவிட்டு அவனைத்தட்டிக் கொடுப்பதும் காதில் விழுந்தது.

கைலாச முதலியார் கண்களை இறுக மூடிப் பார்த்தார். ஆனால் அந்தக் கண்களோ மறுகணமே கொட்டக் கொட்டத்திறந்து கொண்டன. .

"அவனோடே போச்சா? ஒண்ணா, 'ரெண்டா_? அந்தத் தாதுலிங்க முதலிதான் இத்த மைனரைத் தூண்டிவிட்டானா? இல்லை. இந்த மைனர் தான் அவனைத் தூண்டிவிட்டானா? இவனுமில்லா சமயம் பார்த்து நெருக்குறான்; இவன் பாக்கிக்கு வீட்டை அடமானம் எழுதிக் கொடுத்தும், கொஞ்சம்கூட இரக்கம் காட்ட மாட்டேன்கிறானே. இந்தக் கிராதகன் கிட்டேயா நான் மாட்டிக்கிடணும்".

கைலாச முதலியாரின் சிந்தனை வேறு திசையில் திரிந்தது.

"தாதுலிங்க முதலியார் பாக்கியை அடைச்சதில்லா, தப்பாப் போச்சி? அதைக் கண்டுக்கிட்டு அத்தனை பேருமில்லா சுத்தி வளையுதான். இந்தக் தொல்லை யிலிருந்து எப்படி மீளப் போகிறேன்? அந்தக் கல்லிடைக் குறிச்சிவியாபாரி செஞ்ச மாதிரி, நாமும் கோர்ட்டிலே ஐபி. போட்டுட்டா என்ன? ஆனா, அவன் சொத்தையெல்லாம் பெண்டாட்டி பேருக்கு மாத்தி வச்சிட்டுல்லே அப்படிச் செய்தான். எனக்கு அதுக்குக்கூட நாதியில்லையே, வீடு,