பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120


நிலம், நகை எல்லாம் போச்சி, பெருங்காயம் இருந்தடப்பா மாதிரி, வெளி வேசத்திலே காலம் தள்ளுதேன் அப்படியும் செய்யப்போமா? சேச்சே? அப்புறம் மானஸ்தனா வாழ வேண்டாம்? வாரானுக்கு நாமத்தை சாத்திட்டு மான வெட்கம் இல்லாமல் தலை நிமிர்ந்து திரியுறதா_? ஆனால், இந்த உலகத்திலே எந்தப் பணக்காரன் இந்த மாதிரி மானாபிமானத்துக்கு அஞ்சுதான்? இந்தத் தாதுலிங்க முதலிமட்டும் என்னவாம்? தேயிலைத் தோட்டத்திலே இவன் அந்த ஏழை சனங்களின் வாயிலே வயத்திலே அடிச்சித்தானே சம்பாதிக்கிறான்....!"

கைவாச முதலியார். மீண்டும் புரண்டு படுத்தார். ஒரு ஆழ்ந்த பெருமூச்சு அவரது மனப்பாரத்தைக் குறைக்க முயன்று தோல்வி கண்டது. எங்கோ ஒரு பல்லி இடைவிடாது சப்தித்துக் கொண்டிருந்தது.

சேகண்டி மணியோசை நான்கு முறை ஒலித்து அடங்கியது. பக்கத்து வண்டிப் பேட்டைகளிலிருந்து அயலூருக்குப் புறப்பட்டுச் செல்லும் பார வண்டிகளின் மணியோசை இருளினூடே கலகலத்துத் தேய்ந்தது.

கைலாச முதலியார் எழுந்து சென்று ஒரு மடக்குத் தண்ணீர் குடித்து விட்டு வந்து படுத்தார்.

'என் பெண்டு பிள்ளைகளை யெல்லாம் நான் எப்படிக் காப்பாற்றப் போகிறேன்? என் வாழ்வில் தோன்றிய பாக்கிய சுகங்களெல்லாம் இப்படி மின்னல் மாதிரியாகவா வெட்டி மறைய வேண்டும்? முருகா! நான் மேல்நிலைக்கு வராமல், பழைய பஞ்சைப் பரதேசியாகவே இருந்திருக்கக் கூடாதா? இவ்வளவு நாளும் கௌரவமாய் வாழ்த்துவிட்டு, இனிமேலா இந்த அவக்கேடு. எங்காவது ஓடிப்போய்விடலாமா? எங்கே ஓடுவது? என் குழந்தைகளை நிராதரவாய் விட்டுவிட்டா?_ வேறு வழி?_முருகா!_ லோகநாயகி என்னை ஏனம்மா சோதிக்கிறாய்? உனக்கு நான் என்ன குறை செய்தேன்?_செந்தில் ஆண்டவா! உன் திருவிளையாடலையெல்லாம் தாங்க, இந்த ஏழையிடம்