பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123



பிறகு அவர் கைலாசமுதலியாரிடம் திரும்பி, "ஒன்றும் பயமில்லை. ஆரஞ்சுப்பழச் சாறும், குளுகோசும்கொடுத்து வாருங்கள். நான் சாயந்திரம் வந்து பார்க்கிறேன். வரட்டுமா?" என்று கூறி வணங்கி விடைபெற்றுக் கொண்டு வெளியேறினார் டாக்டர்.

மணி அவரைப் பின்தொடர்ந்து சென்று வழியனுப்பி விட்டுத் திரும்பி வந்தான்.

"என்னப்பா மணி, டாக்டர் உங்கிட்டே என்ன சொன்னார்?"என்று ஆவலோடு கேட்டாள் தங்கம்மாள்.

மணிவிஷயத்தைச் சொன்னான்,

"என்ன டைபாய்டா?.."

கைலாச முதலியார் அப்படியே தாக்குண்டு நின்றார், அவர் கண்களிலே அவரையும் அறியாமல் கண்ணீர் துளித்தது; அந்தக் கண்ணீர்த் திரைக்கு அப்பால் அந்த இனம் தெரியாத ஏகாம்பர முதலியாரின் உருவெளித் தோற்றம் பயமுறுத்துவது போல் இருந்தது.

13

ஆறுமுகத்துக்குக் காய்ச்சல் வந்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது.

முந்திய நாள் இரவு முழுவதும் அவன் கண்ணே திறக்கவில்லை; முனகி முனகிப் புரண்டு கொடுத்தவாறே படுத்திருந்தான்; உடம்பில் சூடும் தணியவில்லை. கதகத வென்று கொதித்த வண்ணம் இருந்தது. தங்கம்மாளுக்கு இரவுமுழுவதும் தூக்கமில்லை. ஆறுமுகத்தின் அருகிலேயே உட்கார்ந்து அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

"சுப்பிரமணியா, உன்னைத்தாண்டா நம்பியிருக் கிறேன். பெத்த வயித்திலே பாலை ஊத்தப்பா. மோசம்