பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


பின்னே நீர் செஞ்ச வேலைக்கு, கோபிக்காம, உம்மோடே கொஞ்சவா செய்வாங்க? மரியாதையா எனக்குச் சேர வேண்டியதுக்கு இந்தவாரக் கடேசிக்குள்ளே ஒரு வழி பண்ணியாகணும். இல்லேன்னா, நான் பொல்லாதவனாயிருவேன்?" என்று ஆத்திரம் பொங்கப் பயமுறுத்தி விட்டு, இடத்தை விட்டு எழுந்து நின்றார் மைனர் முதலியார்.

அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கைலாசமுதலியார் திண்டாடிக்கொண்டிருந்தவேளையில், இன்னொருவரும் கடன் பாக்கிக்காக வந்துவிட்டார். வந்தவரைக் கண்டதும் கைலாச முதலியாரின் உள்ளம் படபடத்துக் குதித்தது; வாயே அடைத்துப்போய்விட்டது; கைகால்கள் குளிர்ந்துவிறைப்பது போலிருந்தன.

"என்ன முதலியார்வாள் முதலாளி அனுப்பிச்சாக. ரெண்டிலே ஒண்ணு கேட்டுட்டு வரச் சொன்னாக" என்று அருங்கச் சொல்லி விளங்க வைத்தார் புதிதாக வந்தவர்.

கைலாச முதலியார் திக்கிமுக்கி அவருக்குப் பதில் சொல்ல முனைந்தார்.

"இந்தாங்க, பிள்ளைவாள். இன்னம் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக்கிடச் சொல்லுங்க. அப்புறம் நானே_"

இடத்தைவிட்டு எழுந்து நின்ற டைனர் அருணாசல முதலியார் உதட்டில் ஏளனம் நிறைந்த புன்னகை தோன்ற, கைலாச முதலியார் மீது மீண்டும் சீறி விழுந்தார்.

"என்னவே முழுங்குறேரு? கடன்காரனுக்குப் பதில் சொல்லி அழத்தான் உமக்கு நேரமிருக்கும் போலிருக்கு ஏன்! அதுக்கும் ஒரு சம்பள ஆளைப் போட்டு வையுமேன்."

கைலாச முதலியாருக்கு உடம்பில் ஆயிரம் தேள்கள் ஏக காலத்தில் கொட்டுவது போலிருந்தது. உள்ளத்தினுள்ளே ஏதோ ஒரு உணர்ச்சி களுக்கென்று குன்றிக்