பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156


"சீ! அவசகுனம் புடிச்சாப்பிலே பேசாதியும்! எல்லாம் நல்ல காலம் புறக்காமலா போகப் போவுது?" என்று சிந்தையில் தோன்றிய உள்ளரிச்சலோடுவாய் விட்டுக்கூறித் தம்மைத்தாமே தேற்றிக் கொண்டார் வேறொருவர்.

"நல்ல காலமா? அதைத்தான் நம்ம வடிவேலு முதலியார் தினம் தினம் படிச்சிக் காட்டுதாரே, ஆத்திலே. விழுந்து செத்தான், குளத்திலே விழுந்து செத்தான், மருந்தைத்தின்னு செத்தான், மாயத்தைத்தின்னுசெத்தான், பட்டினி கிடந்து செத்தான், செத்தான் செத்தான்னு வார சேதிதானே இப்ப பேப்பரிலே மலிஞ்சிக்கிட்டு வருது. நமக்குன்னு மட்டும் சொர்க்கம் கீழே இறங்கி வந்துவிடப் போவுதா?" என்று குறுக்கிட்டுப் பேசினார் இன்னொரு நெசவாளி.

"எல்லாம் அந்தத் தாதுலிங்க முதலியார் பண்ணின வேலை. இல்லேன்னா, நாம எல்லாம் பிழைச்சிக் கிடக்கயிலே, கைலாச முதலியாருக்கு மட்டும் இந்தக் கெதி வருவானேன்?" என்று தமது பல்லவியைத் தொடங்கினார் வடிவேலு முதலியார்.

சுப்பையா முதலியாருக்கு உடனே அதற்குப் பதில் கொடுக்கவேண்டுமென்று நினைப்பு வந்தது. எனினும் தமது கட்சிக்குப் பலமில்லை என்பதை உணர்ந்து, மௌனமாக உட்கார்ந்து கொண்டார்.

அதற்குள் வடிவேலுமுதலியாரை ஆதரித்து,"கஷ்டப் படுகிற காலத்திலே மனுசனுக்கு மனுசன் உதவுகிறதுதான் மனுசத்தனம். இவரானா, சமயம் பார்த்துக் கழுத்தை அறுத்துட்டாரே!" இன்னம்யார் யார் தலையிலே கொள்ளி வைக்கப் போறாரோ?" என்று வயிறெரிந்து கொண்டார் ஒருவர்.

"மாமன் மச்சான் ஆனா என்ன? அண்ணன் தம்பி ஆனா என்ன? பணக்காரன் பணக்காரன் தான்; ஏழை ஏழைதான். இதுதான் தம்பி எனக்குப் பட்டது என்று ஒரு