பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199


கலாம்.ஒருத்தன் தயவியே வாழப்படாது; அதை நம்பவும் கூடாது."

தாயின் பேச்சையெல்லாம் மணி மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். எனினும் அவள் கூறிய விஷயங்கள் அவன் மனத்தில் பல்வேறு உணர்ச்சிகளைக் கிளறிவிட்டன.

நிராசை - பயம் - பொறுப்பு - வெறுப்பு - கடமை - எத்தனை உணர்ச்சிகள்! . அந்த உணர்ச்சிகளை இழுபறிக்கு ஆளாகிச் சிக்கித் தவித்தான் மணி.

மணி ஒன்று அடித்த்து.

எங்கோ ஒரு ஆந்தை பலமுறை தொடர்ச்சியாக ஓய்ந்தது. திடீரென்று ஆஸ்பத்திரி அறைக்குள் திசை தவறிப் புகுந்து விட்ட வௌவால் படபடவென்று சிறகடித்து வளையமிட்டுத் திரிந்தது; இரண்டாம் காட்சி சினிமா விட்டுத் திரும்பி வரும் எவனோ ஒருவன் வீதிவழியே தன்னிச்சையாகத் தெம்மாங்கு பாடிச் செல்லும் பாட்டுக்குரல், இருளின் நிச்சுவாச நிலைக்கு உயிர்ப்புத் தந்தது. மீண்டும் நிலவிய அமைதியினூடே பெண்டுல ஓசை தன் தாளத்தைச் சாதகம் பண்ணத் தொடங்கியது...

மணிக்கு தூக்கமே வரவில்லை. தன்னைப் பிணித்து இறுக்கும் எண்ணற்ற சிந்தனை வலைகளைச் சிக்கெடுத்துச் சீராக்கி, அவற்றின் பிடியிலிருந்து மீண்டு வரும் மார்க்கத்தை அவகார் கண்டுகொள்ள இயலவில்லை; மேலும் மேலும் சிக்கல்கள் பலப்படுவது போலத்தான் தோன்றியது.

"என் இந்த மன அவஸ்தை"

வாழ்க்கைப் பிரச்னைகள் தன்னை நாலாபுறத்திலும் சூழ்ந்து கொண்டு பயமுறுத்துவதுபோல் அவனுக்குத் தோன்றியது. அடிவானத்தில் மின்னிய மின்னலைப் பார்க்கக் கூசும் கண்களைப் போல் அந்தப் பிரச்னைகளை