பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218


சமயம், தற்கொலையைப் பற்றிய கனவில் நிவர்த்தி கண்டு ஆனந்தித்த அவன் மனம் மீண்டும் பிரத்தியட்ச உலகை ஏறிட்டுப் பார்க்கத் தொடங்கியது.

"என்ன இது? நான் என்ன இப்படி அலறிப் புடைத்து விட்டேன்? இந்தப் பல்லிக்கா இத்தனை பயம்?- என் உயிருக்கு ஏதோ திடீரென்று ஆபத்து நேர்ந்து விட்டதுபோல் அல்லவா திடுக்கிட்டு விட்டேன்?- நானா கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தற்கொலை செய்து கொள்வது பற்றிச் சிந்தித்தேன்?…

அவன் தன்னைத்தானே நோக்கி மெல்ல நகைத்துக் கொண்டான்.

தற்கொலை செய்துகொள்வது அவ்வளவு எளிதான காரியமில்லையா? ஆமாம், எவனுக்குத்தான் இந்த உலகத்தை விட்டு, உலக இன்பங்களை விட்டுப் பலவந்தமாகப் பிரிந்து செல்லத் துணிச்சல் வரும்? அந்தத் துணிச்சல் வர வேண்டுமானால், அவன் எவ்வளவு தூரம் உலகை வெறுக்கவேண்டும்?

"நான் உலகத்தை, உலக இன்பத்தை வெறுக்கிறேனா? கமலா என் அருகிலிருந்தால் எவ்வளவு ஹிதமாயிருக்கிறது?… அவளை நான் மறந்து விடுவதா? மறந்து விடுவேனா?

இந்தப் பல்லிக்கே இந்தப் பயம் பயந்தேனே. எனக்கு என் உயிரின் மீது அத்தனை ஆசையா?… மனிதனுக்கே உயிரின் மீது அவ்வளவு ஆசையா?…"

அப்போது அவன் மனத்தில் மீண்டும் அந்தப் பிச்சைக்காரனின் தோற்றம் உருக் காட்டியது. அவன் ஏன் எச்சில் இலைக்காக நாயுடன் போட்டி போடுகிறான் என்ற உண்மை அவன் உள்ளத்தில் ஒளி கீறிற்று.

"ஆம். மனிதனுக்கு எந்த ஆசையையும்விட, உயிராசை தான் பெரிய ஆசை. இல்லையென்றால், அவன் ஏன்