பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

263


குறைந்த விலைக்குக் கிடைக்கும் மில் துணியை வாங்கக் கூடப் பணம் இல்லை. அந்த ஜனங்களைப் பார்த்து, கைத்தறித்துணியை வாங்கு என்று சொல்வது அவர்களைக் கேலி செய்வது போலாகும். இல்லையா?

"ஆனால், நாம் மந்திரியின் பேச்சையும் ஒதுக்கி விடக்கூடாது. அவரது பேச்சைக் கொண்டே நாம் அவர்களை நிர்ப்பந்திக்க வேண்டும். எப்படி? முதலில் சர்க்காரின் துணித் தேவைகளுக்குக் கைத்தறித் துணியை வாங்கும்படி நாம் வற்புறுத்த வேண்டும். போலீஸ், ராணுவம், சிறைவார்டர்கள், சிறைக் கைதிகள் இன்னும் ரயில்வே ஊழியர்கள் தபால் சிப்பந்திகள்; ஆஸ்பத்திரித் தேவைகள் இவற்றுக்கெல்லாம் கைத்தறித் துணியை வாங்கி உபயோகிப்பது என்று சர்க்கார் முடிவு செய்தால், இன்றைய நெருக்கடியை ஓரளவு சமாளிக்க முடியும். ஆனால், அமெரிக்கப் பஞ்சை அதிக விலை கொடுத்து வாங்கி நமது தலையில் கட்டும் இந்த சர்க்கார், இந்த யோசனையை அவ்வளவு லகுவில் ஏற்றுக் கொள்ள முன் வராது. நமது ஒற்றுமையின் மூலம் தான் நாம் இதைச் சாதிக்க வேண்டும்....”

மணி மதுரைக்கு வந்து கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் கடந்துவிட்டன. அம்பாசமுத்திரத்தில் இருந்தவரை அவன் தனக்குத் தானே உரியதொரு உலகத்தைக் கண்டு வந்தான்; திருச்சி நகரம் அவனுக்கு வேறொரு பிரபஞ்சத்தைக் காணும் வாய்ப்பை அளித்தது; மதுரையோ அவனுக்குப் புதியதொரு பிரபஞ்சத்தை, வாழ்வில் நம்பிக்கையும் உற்சாகமும் ஊறிப் பெருகும் ஒரு உலகத்தை அவனுக்குப் புலப்படுத்தியது.

மதுரை நகரம்..

தொன்று தொட்டுத் தமிழின் பெருமையையும் பரம்பரையையும் தாங்கி நின்ற ஊர் மட்டும் அல்ல, மதுரை. மதுரை மக்கள் தமிழ்க்குலத்தின் கலாசார பரம்பரையையும், வீரத்தையும், தேசபக்திடையும் போற்றிக் காத்து, பற்பல சமயங்களில் , தங்கள் பணியைத் தயங்காது