பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

297


ஒவ்வொரு ஆசை மனத்தில் கிடந்து துடித்தது. சங்கர் மணியின் வரவைக் கமலாவுக்கு உடனே தெரிவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். மணி கமலாவையும், தாயையும் காணவேண்டுமென்று ஆசைப்பட்டான். ராஜு தன் பெற்றோர்களைக் காண வேண்டுமென்று ஆசைப்பட்டார். எனினும் அவர்கள் ஏழரை மணிக்குக் கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய சுடமையுணர்ச்சி, அனைவரையும் தமது ஆசையை வெளியிட முடியாதவாறு தடுத்து நிறுத்தியது.


25

'கமலா! கமலா?'

மங்கள பவனத்தின் கேட்டைத் தாண்டிச் சென்று வீட்டை நெருங்குவதற்குள்ளாகவே சங்கருக்கு ஆத்திரம் பொறுக்கவில்லை. பொதுக் கூட்டம் முடிந்ததுமே அங்கு ஒரு கணம்கூடத் தாமதிக்காமல், கமலாவிடம் மணியின் வரவைத் தெரிவிக்க வேண்டும் என்ற பரபரப்போடும் ஆனந்தத்தோடும் அவன் உடனே புறப்பட்டு வந்து விட்டான்.

அவன் மனம் அன்றைய மாலை நிகழ்ச்சிகளின் அதிசயத்தையும் அற்புதத்தையும் எண்ணியெண்ணி ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தது. எல்லாம் நம்ப முடியாத விந்தைகளைப் போல், அவனைப் பிரமிக்க வத்தன. எண்ணி எண்ணிப் பரவசமடைவதற்கு அவன் மனத்தில் எத்தனையோ விஷயங்கள் இருந்தன. ஒன்றா, இரண்டா ?

மணி திரும்பி வந்துவிட்டான்; திரும்பி வந்ததோடு மட்டுமல்ல, தேசத்துக்காகப் பாடுபடும் ஞானத்தைப்