பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316



அனுபந்தம்

பிறந்த கதை

பிறவிரகசியத்தைச் சொல்லலாமா?

பாதகமில்லை.

"துடிக்குதென் உதடும் நாவும்; சொல்லு சொல்லெனவே நாவில் இடிக்குது குறளி அம்மே!" என்று குற்றாலக் குறவஞ்சியில் குறத்தி சொல்கிறாள் அல்லவா? சிருஷ்டி ரகசியமும் அது போலத்தான். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இவ்வாறு இடிக்கின்ற அனுபவம் என்னுள்ளேயிருந்து மட்டும் புறப்படுவதில்லை. சமயங்களில் வெளியிலிருந்தும் ஏதாவதொன்று இடிக்கத் தான் நேர்ந்திருக்கிறது. "இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்டவன் 'இன்ஸ்பிரேஷ'னுக்காகக் காத்திருக்கக் கூடாது" என்று சிறந்த நாவலாசிரியரான சாமர்செட்மாம் உபதேசம் செய்கிறார். எனது 'இன்ஸ்பிரேஷனோ' சந்தர்ப்பத்துக்காகக்காத்துக்கொண்டிருக்கும்; ஏதாவது ஒரு நெருக்கடியில்தான் பொங்கிப் புரண்டுகொண்டு வரும். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தமாதிரி, அதுவரை யிலும் அதோ இதோ என்று ஏமாற்றிக்கொண்டிருந்த என் பேனாவும் மூளையும் அசுர வேகத்தில் செயல்படத் தொடங்கும். அவ்வளவுதான். பக்கம்பக்கமாக நாவல்பிறக்க ஆரம்பித்து விடும்!