பக்கம்:பட்டத்தரசி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கேட்பது போல அமைந்து உள்ளது
அகவல் ஓசையால் ஆனஇப் பாடல்.


பாட்டின் தலைவன் பாண்டிய வேந்தனோ?
சேரனோ? சோழனா செந்தமிழ் வீரனா?
ஆமையின் முதுகில் அரிவாள் தீட்டி, செந்நெல் அறுவடை செய்யும் உழவனா?
என்பதும், அவன்பெயர் என்ன என்பதும்
செய்யுள் வரிகள் தெரிவிக்க வில்லை.


மயிலின், சாயலைக் காட்டு தலைவிக்கு, எந்தவூர்? அவளுக்கு என்னஎன்பதும் பேர்? இந்தக் கவிதை எழுத்தினில் இல்லை.

மன்னன் உதட்டினை மதுவினால்கழுவியும் அன்னேன்அருகினில்நங்கையைநிறுத்தியும்வீரம் ஒடுக்கியும் மயக்கி வளர்த்தும் பொய்யும் வழுவும் புகுத்திற்று ஆரியம்!

சங்கநா கரிகம் சரிந்து, பின்னர் இத்தமிழ் நாடு இருட்டில் இருக்கையில், குறள்நூல் தூங்க கீதைத் தத்துவம்,

எல்லோர் நாவிலும் செல்வாக்குப்பெற்றது. புலவரும். பருத்திப் பூனூல் மனிதரும் மெய்ப்பொருளோடுபொய்ப்பொருள்கூட்டினர் பொய்மைக்கு இலக்கியப் புலமைசெல்வழிந்தது.

வரலாற்றின் மீது வளர்ந்தது புராணம். அந்தனச் சாதி ஆயிற்று, வெண்பா! </poem>

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/11&oldid=1517282" இலிருந்து மீள்விக்கப்பட்டது