பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்காம் பத்து

115

திரண்டுள்ள. மண்கெழு ஞாலம் - மண்ணணுச் செறிந்த உலகம். ஓராங்கு - ஒரு சேர. மாதிரம்-திசை. நால்வேறு நனந்தலை - நால் வேறாகப் பரந்துபட்ட அகன்ற இடம். தெள் - தெளிவு; ஒலியிற் குற்றமற்ற தன்மை. உயர்வு - சிறப்பு. வடித்தல் - வார்த்தல். எறியுநர் - அடிப்போர். கல்லென - கல்லென்னும் ஒலியெழ மணியை முழக்க. உண்ணா - உண்ணாத. பைஞ்ஞிலம் - பசிய இடம்; இடத்துள்ள மாந்தர்; இவர் நோன்பு ஏற்றோர். ஞெமர்தல் - அமர்தல். திகிரி - சக்கரம். கண்பொரல் - ஒளி மிகுதியாற் காண்பார் கண்களைக் கூசச்செய்தல். குரல் - கொத்து; இது கொத்தான தழையுமாம்; துளசி மாலை கட்டுவோர் இன்றும் தழையைக் கொத்தாக வைத்தே கட்டுதலைக் காணலாம்; பூங்கொத்துமாம். அலங்கல் - பெரிய மாலை; அசைந்தாடும் மாலை. செல்வன் - திருமால்; செல்வியின் கணவன். துஞ்சுபதி - வாழும் ஊர்.

மணி - நீலமணி. மணிநிறம் - கருநீலநிறம். மையிருள் -காரிருள். நிலாவிரிபு - நிலாக் கதிர்கள் பரவி. கோடு-முனை. கூடுதல் - ஒன்று சேரல்; மூன்றாம் பிறைக் காலத்தே இரு முனை கொண்ட பிறையாக விளங்கிய தன்மைகெட்டு முழு மதியமான நிலைமை. இயலுறல் - தவழ்ந்து செல்லல். துளங்குதல் - அலைதல்; வறுமையால் வாடியலைந்த நிலை. விழுத்திணை - சிறந்த ஒழுக்கம். திருத்தி - திருத்தமுற அமைத்து; அவர் நிலை உயர்வதற்கு வேண்டியன உதவி. முரசு கொண்டு - முரசத்தின் முழக்கினை மேற்கொண்டு; பகைவர் முரசங்களைக் கைக்கொண்டு எனலும் பொருந்தும். கிளர்தல் ஒளி செய்தல். பூண் - பூணப்படும் பேரணி. வியன் மார்பு - அகன்ற மார்பு. கருவி - தொகுதி. வடதெற்கு விலகி - தென் வடலாகக் குறுக்கே அமைந்து. விலகு தலைத்து - மேகங்களைத் தடுக்கும் தலைப்பக்கத்தை உடையது. எழிலிய - அழகிய; மேகங்களைக் கொண்ட எனலும் ஆம். விண்டு வரை - விட்டுணுவுக்குரிய மலை; இது வேங்கடமலையினை; அன்றித் திருமால் குடிகொண்டிருக்கும் நம்பிமலை யெனினும் பொருந்தும். 'ஆண்கடன் இறுத்தல்' என்றது, போரில் உதவிய தன் மறவர்க்கு வரிசையும் பரிசும் அளித்து என்ற தாம்.

கடவுள் - கடவுளர்: தேவர்: அனைத்தும் கடந்தவர். இழைத்த - அமைத்த: கட்டிய. தூங்கல் - தொங்கல். கதவம் - கதவு. எழூஉ - கணைய மரம். நிவத்தல் - நேரிதாக