பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


எழுவதும் தவிர்ப்ப தில்லை:
எழில்கதி ரியங்கி யென்றும்
விழுவதும் தவிர்ப்ப தில்லை:
விளக்கமிஃ தாக வேண்டித்
தொழுவது தவிர்த்தால் தோன்றித்
துணையாகும் தெய்வ மில்லை!
அழிவது தவிர்த்தா ரன்றி
அழுவது தவிர்ப்பா ரில்லை!

கள்ளமும் கபட மும்தான்
கடுகள வின்றி யின்றென்
உள்ளமும் திறந்து ரைத்தேன்;
உண்மையோர்ந் துணர்ந்து வந்து
கொள்ளுவ துனது கையில்;
கூடாத தாகத் தோன்றின்
தள்ளுவ துனது கையில்;
தவறென தாகா" தென்றோ.

அறுகம்புல் லறிந்து ரைத்த
தனைத்தையு மமர்ந்து கேட்டுக்
குறுகவே கொதித்த கும்பிக்
குயில்கூறும்; கொக்குங் கூறும்:
மறுகவே மனமும் மாய்ந்து
மறுமொழி யின்றி நின்றின்
றுறுககாணூற் றிருந்த ஆலுக்
குறுதுணை யாக வோர்ந்தே!

செக்கெ'ன இடைசிறுத்தும்
செந்தளி ருடல்பெ ருத்தும்,-
சிக்கெனச் சொல்லா டும்புல்
செய்கின்ற சிறுமை தேரா
'மக்கெ' மற்றிவ் வாலின்
மரியாதை மறைந்த' தென்றே
கொக்கினம் கூவிக் கூறிக்
குமைந்தன, கொம்பில் குந்தி!