சமணசமயப் புகழ்பாக்கள்
217
மகேந்திவர்மனான குணபரன் திருநாவுக்கரசரை அழைத்துவரத்தன் அமைச்சரை அனுப்பினான் என்பதைப் பெரிய புராணத்தால் அறிகிறோம்.
பெரிய புராணத்ததைக் கொண்டு. மகேந்திரன் காலத்தில் அமைச்சர் இருந்தனர் என்பதை அறிதல் போல - இரண்டாம் நந்திவர்மன் காலத்திலும் பிற்காலத்திலும் பல்லவர் அரசியல் அமைப்பில் அமைச்சர்குழு இருந்தது என்பதைக் கல்வெட்டுகளால் நன்கறியலாம். இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சன் ‘பிரம்மஸ்ரீ ராஜன்’ எனப்பட்டான். எனவே, அவன் பிராமணன் என்பது வெளிப்படை மூன்றாம் நந்திவர்மன் அமைச்சன் நம்பன் இறையூர் உடையான் என்பவன். அவன் முன்னோர் பல்லவர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். உத்தமசீலன் - ‘தமிழ்ப் பேரரையன்’ என்று ஓர் அமைச்சன் பெயர் காணப்படுகிறது. எனவே, ‘பிரம்மராஜன்’ (பிரமராயன்), பேரரையன் என்பன அமைச்சர் பெறும் அரசியல் பட்டங்களாக இருந்தன. ‘தென்னவன் பிரமராயன்’ என்று மாணிக்கவாசகர் அழைக்கப்பட்டமை காண்க. இதனால் பண்டைத் தமிழ் அரசர், தம் அமைச்சருடைய சிறப்பியல்புகளை நோக்கிப் ‘பிரமராயன், பேரரசன்’ என்று பட்டங்களை வழங்கிய முறையைப் பின்பற்றியே பல்லவரும் நடந்து வந்தனர் என்பது நன்கு விளங்குகின்றது.[1] ‘உத்தம சீலன், நம்பன்’ என்னும் அமைச்சர் ஆணையை நடைமுறையிற் கொணர்ந்தனர் என்பது தெரிகிறது. அமைச்சர் அரசர்க்கு ஆலோசனையாளராகவும் இருந்தனர் என்பது வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டால் அறியக் கிடக்கிறது.
உள்படு கருமத்தலைவர்
பல்லவ வேந்தரிடம் உள்படு கருமத்தலைவர் (Private Secretaries) இருந்தனர் என்பதை ஹிரஹத கல் முதலிய சில பட்டயங்களால் அறியலாம். வாயில் கேட்பார் (Secretaries) கீழ்
- ↑ Dr.C.Minakshi’s “Administration & Social Life under the Pallavas, p.52.