பக்கம்:பாரதிதாசன் நாடகங்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடு போற்றும் நாடகங்கள்

முனைவர் ச. மெய்யப்பன்

அண்ணாமலைப்பல்கலைக் கழகம்

தலைமைச் சிறப்புகள் பல நிறைந்த தொல்காப்பியம் நாடக வழக்குப் பற்றிக் கூறுகிறது சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம். சிலப்பதிகாரத் தொடக்கம் நல்ல நாடகத் தொடக்கம். திருமுறைகள் முந்தமிழை ஆடல்நெறி. பாடல்நெறி என் அழகுற அமைத்துக் காட்டுகின்றன. கம்பநாடகம் ஓர் இலக்கியப் புதுமை, குறவஞ்சியிலும் பள்ளு இலக்கியங்களிலும் நளிசிறந்த நாடகக் கூறுகள் பல பொதிந் துள்ளன. இருபதாம் நூற்றாண்டில் சுந்தரனார் மனோன்மணியம் நாடகம் மூலம் நாடக மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். மனோன்மணியத் தமிழ்ந்தாய் வாழ்த்து தமிழியக்கத்திற்கு ஊற்றுக்கண்ணார் அமைந்து விட்டது. நீண்ட நெடிய நாடக மரபினை உடைய தமிழுக்குப் பாவேந் தரின் நாடக ஆக்கங்கள் வனம் சேர்ப்பவை. பாவேந்தர் முத்தமிழறிஞர். பாடவும், நடிக்கவும் வல்ல பாவலர். பாட்டும் கூத்தும் பாவேந்தர்க்குக் கைவந்த கலைகள், புதுமையும் புரட்சியும் அவர் படைப்புகளின் தனிச்சிறப்புகள், www.fur பல்கலைக்கழகமாம் அமைவன் நாடகங்கள், வீடும் நாடும் நலம் பெறப் பாவேந்தர் நற்கருத்துகள் பவ்வற்றைத் தமிழ் நிலத்தில் தம் நாடகங்கள் மூலம் விதைத்துள்ளார். கவிதை கதை கட்டுரை, நாடகம் ஆகிய பல்வகை இலகிய வடிவங்களாலும் பாவேந்தர் முத்திரை பதித்துவினார். மிகப் புதிய அமைப்பில் பேசா நாடகமாரிய அமைதி என்னும் நாடகத்தைப் படைத்துத் தமிழ் நாடக வரலாற்றில் நிலைத்த இடத்தைப் பெற்று விட்டார். எதிர்காலத்தில் தமிழ் நாடகங்கள் வளம் பெறும் என்பதற்குப் பாவேந்தரின் படைப்புகள் முன்னோடியாய்த் திகழ்கின்றன. எதனையும் அழகாக எடுத்துரைப்பது பாவேந்தர் இயல்பு. நாடகங்கள் முழுவதும் நகைச்சுவை இழையோடுகிறது. பாவேந்தர் தம் படைப்பு களுக்கும் கதை மாந்தர்களுக்கும் இடும் பெயர்கள் தமிழ்நலம் கொழிப்பவை. நாடும்ஏடும் போற்றிப் பாராட்டத்தக்க வகையில் நல் நாடகங்கள் பலவற்றைப் படைத்த பாவேந்தரின் நாடக ஆற்ற அறிஞர் இளங்கோ திட்நுட்பத்துடன் ஆராய்ந்து முனைவர் பட்ட ஆய்வேட்டில் தக்க சான்றுகளுடன் ஆய்வு மதுகையுடன் நிறுவியுள்ள நிறம் நாடக ஆய்வுலகம் பெற்த பேறாகும். கருத்துக்களைக் கல அழகோடு நாடக உத்திகளுடன் நெந்த முறையில் பாவேந்தர் படைத்துள்ளார். பார்போற்றும் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் செம்பதிப்புகளாக வெளியிடுவதில் பெறுவுைம் பெருமிதழம் பேருவளையும் கொள்கிறோம்.