பக்கம்:பாற்கடல்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

129


உன்னை முன்னால் கழட்டியே ஆகணும், ஆபரேஷன் செய்யறமாதிரி...'

வேலைக்கு அமர்ந்த புதிதில், என் அறியாமையில் முதல் ஞாயிற்றுக்கிழமை நான் வேலைக்குப் போகவில்லை. அடுத்தநாள் போனதும், ”ஒஹோ, நீங்கள் எல்லாம் Gazetted ஆபீஸர்களா? ஞாயிற்றுக்கிழமை வரமாட்டீங்களாக்கும்!”

சரி, நான் வேலையை உதறிவிட்டு மன்னிப்பாட்டி சாவுக்குப் போயிருந்தாலும் அவள் ஆவி சம்மதித்திருக்காது. அவளுடைய கடைசி மூச்சு என்னைக் கண்டிக்கத் திரும்பினாலும் திரும்பியிருக்கும்.

”அட அசடே! இப்படிப் பொறுப்பில்லாமல் இருப்பையா? குடும்பம் என்னாவறது?”

“எனக்காக வந்தையா? நன்னாயிருக்கு! என்னைப் பார்க்காட்டால்தான் என்ன ? நான் போக வேண்டி யவள்தானே!”

மானேஜர் படபடவெனப் பேசிவிட்டானே ஒழிய, ஒரு கால், அரைமணி நேரம் பொறுத்துத் தானே என்னைப் போகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டி கிடைத்து நான் ஊர் போய்ச் சேர்வதற்குள், மன்னிக்கு நெருப்பு வைத்தாகிவிட்டது. அவள் கதை முடிந்து நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாகின்றன.

சில சமயங்களில் சூழ்நிலையின் அலுப்பில் நொந்து போகையில் அவள் நினைப்பு எழும்.

(அலைபாயும் மனந்தானே!)

இந்த வீட்டில், அந்த தடயுடல் கெடுபிடிக்காரர்கள், அசாதாரணிகள், தாங்கள் தனி என்ற இறுமாப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/135&oldid=1533987" இலிருந்து மீள்விக்கப்பட்டது