பக்கம்:பாற்கடல்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

151


சென்னையில் இந்திராநகர், இன்னும் கொஞ்சம் தள்ளித் திருவான்மியூரில் ஒரு பகுதி, அடையாறில் (Boat house Road) பங்களாக்கள். இவற்றை மட்டும் வெளிநாட்டுப் பிரயாணிகளுக்குக் காட்டிவிட்டு, 'இதுதான் இந்தியா!’ என்று ஒரு பதிவை மனத்தில் உண்டாக்கி விட்டு வந்த விருந்தாளிகளைத் தளுக்காக மறு காட்சிக்கு Tourism இலாகா அழைத்துச் செல்வதுபோல, 'இதுதான் சென்னை கூட இவை இல்லை. இந்த Magic lantern slides வெளிநாட்டுக் கடன் வாங்கப் பயன்படலாம். இவை வாழ்க்கையின் எடுத்துக்காட்டுக்கள் அல்ல.

பிராம்மணார்த்தம் சாப்பிட்டுவிட்டு உண்ட மயக்கத்தில் வாசல் திண்ணையில் படுத்து மண்டையினின்று உதிர்ந்த எள்ளைக் கையில் வைத்துக்கொண்டு கட்டிய கனவுக் கோட்டைக்குள் இந்தக் கானல்நீர் எழுத்துக்கள் எழுப்பும் காட்சிகள் ரகம் கண்டுவிடும். இந்தத் தாபங்கள் எவருக்கும் உண்டு என்பதை அப்பவே எதிர்பார்த்து, ஆனால் அவற்றின் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்துவதற்காக, இந்தப் பிராம்மணார்த்தக்காரன் கதை, காவடியில் கண்ணாடிச் சாமான்கள் கூடையை வைத்துக்கொண்டு, அல்நாஸர் கனவு கண்ட கதை - திரிசங்கு சுவர்க்கமேறிய கதை. இவை காரணம் இல்லாமல் முளைத்துவிடவில்லை.

“பின் மறதிக்கு வழி என்ன? உன் மன்னிப் பாட்டியின் அழுகை வாழ்க்கைதான் வாழ்க்கை என்று நீ ஓதும் வேதத்தை நாங்களும் ஓத வேண்டுமா? முதலில் கேட்டுக்கொள்ள வேண்டுமா ?”

சோகங்களுக்கு, கிட்டாததைத் தெரிந்த பின்னர் அவற்றை வெட்டி விடுவதற்குத்தான் மறதி எனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/157&oldid=1534067" இலிருந்து மீள்விக்கப்பட்டது