பக்கம்:பாற்கடல்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

343


ஒரு பிரதிகூலத்தை உணர்கிறேன். அம்முவாத்து இந்தத் தலைமுறையில் - அதாவது நான் விவரித்துக் கொண்டிருக்கும் என் தந்தைக்கு முன் தலைமுறை முன்னோர்கள் ஒவ்வொருவருமே, ஏதோ விதத்தில் வார்ப்படம் மீறியவர்கள். பேச்சிலும், தோற்றத்திலும் அவர்களுக்கு தோரணை இயற்கையாகவே வந்தது. அதை அவர்கள் மறப்பது இல்லை. வார்த்தைகளின் உசச்சரிப்பில்கூட ஒரு தனித்தனம்; அந்த வரியை, அதிகாரத்தை எழுத்தில் என்னால் கொண்டுவர இயலவில்லை.

‘எல்லாருமேவா இப்படி? - லேசாக நம்பத்தகாத ஓர் அதிசயத்துடன்? - இனம் காண முடியாத அதிசயத் துடன்!‘ என்று நேயர்கள் வியப்புற, அவர்கள் மனத்துள் ஒரு புன்னகை புரிந்துகொள்ளக்கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கு நியாயம் இல்லை. அது நியாயம் இல்லை என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

எனக்கு அப்போது ஆறு வயது. கதை கேட்கும் வயது. அப்போது கேட்ட கதையை வைத்துக்கொண்டு இப்போது கதை பண்ணுகிறாயாக்கும்? என் முயற்சி எவ்வளவு நாணயமாக இருப்பினும், இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? உண்மையில் அதுவுந்தான், என்னை அறியாமல் நடந்துகொண்டிருக் கிறதோ என்னவோ.

உணமை என்பது என்ன? What is truth? Pilate-இன் என்ன மகத்தான கேள்வி! கோபுரக் கேள்வி. எத்தனை முறை கேட்டுக்கொண்டாலும் தோன்றும் வியப்புக்கு அலுப்பே இல்லை.

ஆம், உண்மை என்று சொல்லிக்கொள்ளும் போதெல்லாம் அவரவருக்குக் கிடைப்பது பார்வைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/349&oldid=1534620" இலிருந்து மீள்விக்கப்பட்டது