பக்கம்:பாற்கடல்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

லா. ச. ராமாமிருதம்


(கோணங்கள்)தாம். உண்மை அதன் முழுமையில் எங்கே? கண்டவர் விண்டிலர். உண்மையைப் பேசாமல் நழுவுவதற்கு, இப்படி ஒரு தீர்ப்பா?

ஆகையால் உண்மையோ ஒரு பொய்யோ - அந்த எண்ணமே கூசுகிறது. பயமாய் இருக்கிறது. இதுமாதிரியான புரட்சி பண்ணுவதில் நாட்டமும் இல்லை. அதற்கு உரிய தில்லும் எனக்கு இல்லை.

இந்த உதயத்தையோ (இருளையோ) அதன் முழுமையில் உணர்ந்துவிட்டதால்தானோ, Sartre தன் சுயசரிதைக்கு Words என்று தலைப்புக் கொடுத்தானோ?

வெறும் சொற்கள்.

வெறும் பார்வைகள்.

கோணங்கள்.

இவைகளிலாய, இவைகளே ஆய.

மனித உறவுகள்.

உண்மை என்பது என்ன?

அது எங்கே?

இவை சேர்ந்ததுதான் உண்மையா?

ஆயினும் இவைகளில் கமழும் மணங்களை மறுக்க முடியுமா? இவைகளும் நாம் அதன் முழுமையில் உணர, காண இயலாத, சதா தேடிக்கொண்டிருக்கும் உண்மையைச் சார்ந்தனதாமே !

பிறவி, சாவு, இடையில் உறவுகள் இல்லாமல் இருக்க முடியாது.

துணை தேடும் உறவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/350&oldid=1534621" இலிருந்து மீள்விக்கப்பட்டது