பக்கம்:பாற்கடல்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

லா. ச. ராமாமிருதம்


தீயில் இப்பவும் சுறீல்'

கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப்பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே...

காலத்தை அழித்துக்கொண்டு காட்சி கண்முன் எழுகிறது.

எழுதி எத்தனை வருடங்கள் ஆயினவோ?

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

சொல்ல வருவது யாதெனில், எனக்குத்தான் வயதாகிக் கொண்டிருக்கிறது.

(வயதுடன் இனி நான் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறதா? மலைப்பாம்பின் படிப்படியான தழுவல்.)

ஆனால் எழுத்துக்கு வயோதிகம் கிடையாது. எழுத்துக்கு வயதை எழுதுவதற்கு பதிலாக, அதை, ஒலிம்பிக் விளையாட்டு வீரன் ஏந்தி ஓடிவரும் தீவட்டியுடன் ஒப்பிட எனக்கு ஆசையாயிருக்கிறது. ஒரு திரியிலிருந்து மறு திரி அடுத்தடுத்து ஏற்றிக் காணும் அனந்த பத்மநாப ஸ்வாமி கோயில் லக்ஷ தீபமாகப் பார்ப்போமே! எல்லாமே, காலத்துக்குக் காலம் வழிவழியாக ஏற்றிய உருவுக்கேற்பத் தோய்ந்திருக்கும் வண்ணம் தானே!

ஒன்று, எனக்கு இந்த மகத்தான பதவியைக் கொடுத்தவர்களுக்கு என் எழுத்தின்மேல் அவர்களுடைய பெரும் அபிமானம்தான் காரணம் என்பதில் எனக்குத் துளிகூட ஐயமில்லை. இதுபோல நான் முகமறியாத வாசக அன்பர்களின் ஆசிபலம், எண்ண பலம் இன்றுவரை என்னில் ஊறி என்னை வளர்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/54&oldid=1533150" இலிருந்து மீள்விக்கப்பட்டது