பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/255

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அருஞ்சொற்பொருள் அகரவரிசை

233


இயையாக்கடை - முடியாத வழி 230 இருந்தோம்பி - இருந்து பேணிக் காத்து 81 இருபுனல் - கீழ்நீர் மேல்நீர் 7 இருவினை - நல்வினை தீவினை 5 இருவேறு - இரண்டு கூறு 374 இலம் - வறியம் 174 இலர் - வறிஞர் 270 இல்லல்ல - (யாவர்க்கும் முன்னே) அமைந்துகிடந்தன 115 இல்லாகியாங்கு - இல்லையாயினாற் போல 247 இல்லிலோர் - மனைவி இல்லாதவர் 59 இழவூழ் - இழத்தற்கேதுவாகிய ஊழ் 372 இழிந்த - தாழ்ந்த 133 இழுக்கம் - ஒழுக்கத்தில் தவறுதல் 133 இழுக்காறு - தீநெறி 164 இறல் - இறுதி 180 இனைத்துணைத்து - இவ்வளவினது 87 இன்சொலினது - இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணது 93 இன்புறூஉம் - இன்பத்தை மிகுவிக்கும் 94 இன்னாச்சொல் - கடுஞ்சொல் 35 ஈத்துவக்கும் -வறியார்க்கு வேண்டிய

    வற்றைக் கொடுத்து மகிழும்          228

ஈரம் - அன்பு 91 ஈன்பது - பயப்பது 165 உடற்றும் - வருத்தும் 13 உணரற்பாற்று - உணரும்

    பான்மையை உடைத்து                11

உண்பதூஉம் -உண்ணும்பொருளும் 166 உரவோர் - அறிவுடையோர் 136 உரியாள் - உரிமையாகியாள் 149 உவமை - நிகர் 7 உள்ளல் - கருதுதல் 282 உள்ளாறும் - மனத்தின்கண்

   அப்பொழுதே ஆறும்                   129

உள்ளூர் -.ஊர் நடு 216 உறுகண் - துன்பம் 216 உறூம்உம் - மிகுவிக்கும் 94 உற்றக்கடை - வந்துற்ற இடத்து 372 ஊக்காது - நோக்காது 253 ஊட்டா - அடைவிக்காது 378 ஊதியம் - நிலையான பேறு 231 ஊருணி - ஊர்வாழ்நரின்

   குடிநீர்க்குளம்                         215

ஊன் - உடம்பு 251 எச்சம் - வழிமரபு 112 எச்சம் - நன்மக்கள் 114 எத்தன்மைத்தாயினும் - எந்த

    இயல்பினதாகத் தோன்றினாலும்     355

எவ்வம் - இழிவுரை 223 எழிலி - மேகம் 77 எள்ளப்படும் - இகழப்படும் 191 எனைத்துணையராயினும்-

    எத்துணைப் பெருமையுடைய
    ராயினும்                           144

ஏதிலார் - அயலார் 188 ஏமாப்பு - வலியாதல், அரண் 112, 126 ஐயுணர்வு - புலன்களால் உணரப்படும்

     ஐந்தாகிய உணர்வு (மனம்)        354

ஒக்கல் - ஏழை உறவினர் 43 ஒரால் - நீக்குதல் 153 ஒல்கார் -தளரார் 136 ஒழியவிடல் - விட்டுவிடுக 113 ஒழுகலாற்றார் - ஒழுகமாட்டார் 286 ஒழுக்காறா - ஒழுக்கநெறியாக 161 ஒன்றா - இணையின்றாக 233 ஒன்றாக - முதற்படியாக 323 ஒத்து - வேதம் 134 ஒம்பப்படும் - பாதுகாக்கப்படும் 131 ஓம்பல் - பேணிச்செய்தல் 43 ஓம்பி - போற்றி, மிசைவித்து 81 ஓம்புவான் - பேணுவான் 84 ஒர்த்து - ஆராய்ந்து 357 கடப்பாடு - ஒப்புரவு 211 கணை - அம்பு 289 கண்டற்று - உணர்ந்தாற் போலும் 249 கண்ணற - கண்ணோட்டமற 184 கதம் - சினம் 130 கரவு - வஞ்சனை 288 கரி - சான்று 25 கரியார் - இருண்டிருப்பார் 277 கலுழும் - அழும் 117 "கவர்ந்தற்று - பறித்து உண்ணலொக்கும் 100 கவ்விது - அலர்தலைப் பெற்றது 114 கள்வார் - களவு செய்வார் 290 கள்வேம் - கவர்வேம் 282