பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/149

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் அருஞ்சொற் பொருள் அகரவரிசை (எண், குறள் எண்ணைக் குறிக்கும்)

அகலாக்கடை - பெருகாதாயின் 478 அசாவாமை - தளராமை 611 அசைவிலா - தளராத 594 அடியளந்தான் - தன்னடியளவானே எல்லா உலகையும் அளந்த கதிரவன் 610 அடுக்கிய - தொடர்ந்த 525 அடுமுரண் - பகைவெல்லுதற் கேற்ற வலிமை 567 அதர்வினாய் – வழிவினவி 594 அதிர – நடுங்க 429 அமைந்தக்கண்ணும் - தானே வந்தெய்திய விடத்தும் 606 அமைவர் - அன்பாகப் பொருந்துவர் 580 அருஞ்செவ்வி – எளிதில் காணப்படாத வனாய் 565 அருப்பறா - கிளைத்தல் அறாத 522 அல்லல் - துன்புறுத்தல் 460 அல்லல் - துயர் 626 அல்லாவார் – துன்புறார் 593 அவியினும் – சாவினும் 420 அளவளாவுதல் - நெஞ்சுகலத்தல் 523 அளவு - எல்லை 477 அளியின்மை - அருளின்மை 557 அறிகல்லாதவர் - முன்னறியும் ஆற்றலில்லாதார் 427 அறுதொழிலோர் - அறுவகைத் தொழில் செய்வோர் 560 அனைத்தானும் - அத்துணையாயினும் 416 அன்னநீரார் – அத்தன்மையார்க்கு 527 ஆகாறு-வருகின்ற நெறியளவு 478 ஆக்கிக்கோடல் - முடித்துக்கொள்க 628 ஆக்கும் - வளர்க்கும் 616

ஆசு - குற்றம் 503 ஆடியற்று - ஆடினாற்போலும் 401 ஆண்மை - ஆளுந்தன்மை 606 ஆர்க்கும் - பிணிக்கும் 482 ஆற்றாக்கடை - செய்யாவிடின் 469 இகழ்ச்சி - சோர்வு 539 இடிக்கும் - நெருங்கிச் சொல்லும் 447 இடிபுரிந்து - கழறுதலை மிகச்செய்து 607 இட்டிதாயினும் - சிறிதாயினும் 478 இயற்றல் - தனக்குப் பொருள் வரும் வழிகளை மேன்மேல் உண்டாக்குதல் 385 இயைந்தக்கால் - வாய்த்தால் 489 இயைபு - பொருத்தம் 573 இவறல் - கஞ்சத்தன்மை 432 இவறியான் - பற்றுள்ளஞ் செய்தான் 437 இழுக்கல் - வழுக்குதல் 415 இழுக்காமை - மறவாமைக் குணம் 536 இழைத்துணர்ந்து - நுண்ணிதாக ஆராய்ந்தறிந்து 417 இறும் - முறியும் 475 ஈகலான் - இவறன்மாலையன் 863 ஈயப்படும் - இடப்படும் 412 உகாஅமை - வெளிவிடாமை 585 உஞற்றிலவர் - முயற்சி இலராயினார் 604 உஞற்றுபவர் - முயல்வார் 620 உப்பக்கம் - புறம் 620 உயிரச்சம் - உயிர்க்கேடுபற்றிய அச்சம் 501 உய்க்கிற்பின் - நுகரவல்லனாயின் 440 உரம் - திண்ணிய அறிவு 600 உரைசான்ற - புகழமைந்த 581 உலைவின்றி - தளர்ச்சியின்றி 620 உளவரை - தனக்குள்ள ஈகை அளவு 480