பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354

பிரதாப முதலியார் சரித்திரம்

யும் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிரகாரம் தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் வர்ணித்து வர்ணித்து என் தாய் தந்தையர், மாமனார் மாமியார் முதலானவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். அதைக் கேட்டவுடனே எல்லாருக்கும் உண்டான ஆச்சரியமும் ஆனந்தமும் அபரிமிதமே. தேவராஜப் பிள்ளையுங் கனகசபையுஞ் சொன்னது போதாதென்று அந்த அதிசயங்களை யெல்லாம் என் வாயாலே ஒருதரம் கேட்டார்கள். பிறகு நான் சொன்னது போதாதென்று ஞானாம்பால் வாயாலே ஒரு தரம் கேட்டார்கள். இவ்வகையாக அந்த இரவு முழுவதும் தேவராஜப்பிள்ளை வீடு சந்தோஷ அமர்க்களமாயிருந்ததே யன்றி ஒருவராவது உறங்கவில்லை.

மறுநாட் காலையில் ஞானாம்பாள் என்னிடத்திலும் என் தாயாரிடத்திலும் ஆலோசனை செய்துகொண்டு தான் பெண்ணென்பது முதலான விவரங்களைக் காட்டி அடியிற் கண்டபடி ஆநந்தவல்லிக்கு ஒரு நிருபம் எழுதியனுப்பினாள்:-

“என் பிரியமான தங்கையே!

மகாராஜாவாக விக்கிரமபுரியை அரசாண்ட நான் உன்னைப்போற் பெண்ணே தவிர ஆண் அல்ல. உபராஜாவாயிருந்து அந்த ஊரை ஆண்டவர் தான் என்னுடைய கணவர். நான் ஆண்வேஷம் பூண்டுகொண்டு என்னைவிட்டுப் பிரிந்து போன என் பிராண நாயகரைத் தேடிக்கொண்டு வந்த இடத்தில் எனக்கு ராஜபட்டங் கிடைத்து நான் அரசாண்ட விவரங்களெல்லாம் உனக்குத் தெரியுமே! என்னைப் புருஷனென்று நினைத்து என்னை நீ பாணிக்கிரகணஞ் செய்துகொள்ள விரும்பியதாக நான் கேள்விப்பட்டு அளவற்ற வியாகூலம் அடைந்தேன். பல காரணங்களால் நான் பெண்ணென்கிற உண்மையை உனக்குத் தெரிவிக்கக் கூடாமற் போய்விட்டது. உனக்குப் பட்டாபிஷேகஞ் செய்துவிட்டு நான் வெளியே வந்துவிடலாமென்று நினைத்து ஜனங்