பக்கம்:புதிய தமிழகம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 புதிய தமிழகம்

லேத் தயாராக வைத்துக் கொண்டே பழைய உடலை விட்டு நீங்கி அதற்குள் நுழைகிறது. அஃதாவது, உயிர் பழைய உடலை விட்டு நீங்குவதும் புதிய உடலில் நுழை வதும் ஒரே சமயத்தில் நிகழ்வன என்பது கண்ணன் கருத்து. இதே கருத்தினை,

- 'உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு,' என்னும் குறளில் காணலாம். உ ற க் க த் தி ன் இறுதியும், விழிப்பின் தொடக்கமும் இணைந்து நிகழ் வன. எனவே, உடலே விட்டுப் பிரியும் உயிர் தனித் திருப்பதில்லை என்பது கருத்து. இங்ஙனம் கூறும் கண் ணன் திருவாக்கு மதிக்கப் படுவதாயின், பிரிந்த உயிர் புதிய உடம்பில் புகுந்து விடுவது என்று கொள்ளலாம். அங்கு அதற்கு வேண்டிய உணவு முதலியன தாயின் உணவு முதலியவற்றல் அமைகின்றன. எனவே, இறங் தவர் பெயரால் புரோகிதருக்குக் கொடுக்கப்படுவன எல்லாம் வீண் என்பது வெளியாகும். ஆகவே, வள்ளு வர் தென்புலத்தார் கடன்' என்றது. 'புரோகித ருக்கு வழங்குதல்" என்பதாக இருத்தல் இயலாது. ஒரு குடும்பத்தில் இறந்த முன்னேர்களை அவர் பின்னேர் கினேந்து வழிபட்டு அவர் மரபினர்” என்னும் பெயரை உலகில் நிலைநிறுத்தி வாழ்தலேயே வள்ளுவர் குறித்த னர் என்று கூறல் பொருத்தமாகும். 'அன்ளேயும் பிதா வும் முன்னறி தெய்வம்" என்ற பொன் மொழிப்படி இறந்த தாய் தந்தையரைத் தெய்வமாக வழிபட்டு,அவர் நினைவைப் பாதுகாத்தல் அவர்தம் மக்களுக்கு அமைந்த நற்பண்பு தானே!

இவ்வாறு இறந்தார் வழிபாடும், இறைவழிபாடும், விருந்தினரைப் போற்றுதலும், சுற்றத்தினரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/60&oldid=641932" இலிருந்து மீள்விக்கப்பட்டது