பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பெரியபுராண ஆராய்ச்சி பின்னர்ப் பரமேசுவரன் அவனை எளிதிற் பெருவளநல்லூரில் எதிர்த்து வெற்றி பெற்றான் என்னலாம். இப்போரில் பாண்டியன் தோற்றிருப்பின், முழுத் தமிழ்நாடும் சாளுக்கியர் கைப்பட்டிருக்கும். சிறந்த சைவ அரசனாகிய நெடுமாறன் வடபுலத்துப் பேரரசனை வென்று தன்னாட்டு உரிமையைக் காத்ததோடு சைவத்தைத் தமிழ்நாட்டில் நிலைக்கச் செய்தான் என்ற செய்தி சுந்தரர் காலம்வரை நன்றாய்ப் பரவி இருந்தாற்போலும் அந்நாயனார் தமது தொகையில், - நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் என்று பாண்டியனை ஏத்தெடுப்பாராயினர்! இங்ங்ணம் சுந்தரர் குறித்ததன் கருத்தை நம்பி அறியாவிடினும், அரசியல் அறிவு நிரம்பப் பெற்ற சேக்கிழார் அரும்பாடுபட்டு ஆராய்ந்து, இந்நெல்வேலிப் போரை விளக்கமாக 5 பாக்களில் விளக்கியுள்ளமை வியந்து பாராட்டற்பாலது. சேக்கிழார் குறிக்கும் நெல்வேலிப் போர் வருணனையும் கூரம் பட்டயம் குறிக்கும் பெருவள நல்லூர்ப் போர் வருணனையும் பல இடங்களில் ஒன்று பட்டிருத்தல் படித்து இன்புறத்தக்கது. இந் நெல்வேலிப் போர் விக்கிரமாதித்தன் கத்வல் பட்டயம் வெளியிட்ட பிறகு ஏறத்தாழக்கி.பி. 674 அல்லது 675 இல் நடந்தது என்னலாம். இக்காலம் நாம் கொண்ட அப்பர்-சம்பந்தர் காலத்திற்குப் (கி.பி. 580-660 பல ஆண்டுகள் (14 அல்லது 15 ஆண்டுகள் பிற்பட்டதாகும். இக்காலம், நெடுமாறன் சைவனாகிச் சைவம் தழைக்க நாட்டை ஆண்டு வருங்கால்' என்ற சேக்கிழார் கூற்றுக்கு ஒத்துவரல் 乐町6顶莎。 பூசலார் இவர் திருநின்றவூரினர் மறையவர் 2 சிவன் கோவில் கட்ட விரும்பிப் பணந்தேட முயன்றார் முயற்சி பயன்படவில்லை (3) மனத்தாற் கோவில் அமைத்துக் குறித்த ஒரு நாளில் கும்பாபிடேகம் செய்ய நினைத்தார் (4 அதே நாளைத் தான் கட்டிய கற்றளிக்கும் கும்பாபிடேக நாளாகக் காஞ்சிக் காடவர்கோமான் விதித்திருந்தான் அதனால் சிவபிரான் அவன் கனவிற் சென்று பூசலார் குறித்த நாள் தவிர்த்து வேறொரு நாளைக் குறிக்குமாறு கூறினார். 15 அரசன் மறுநாள் நின்றவூர் சென்று பூசலாரைக் கண்டு அவர் கட்டியது மனக்கோவில் என்பதை அறிந்து வியந்து அவரைப் பணிந்து மீண்டான். (6) கச்சிக்கற்றளி எடுத்த காடவர்கோன் அதன் பக்கத்து இடங்களையும் அக்கோவிலுக்காக்கிப் பெருஞ்செல்வம் வைத்தான். இது சேக்கிழார் கூற்று' - 1. கச்சியில் முதன்முதல் கற்றளி கட்டிய காடவன் இரணஜயனான இராசசிங்கன். எனவே அவனே பூசலார் காலத்தவனாதல் வேண்டும் என்பது