பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 47 காட்சி ஐந்து (மனமருத்துவர் தமது சிகிச்சை அறையில் நாற்காலி பில் அமர்ந்திருக்கிருர், சீதா நமஸ்காரம் செய்து கொண்டே நுழைகிருள்.) மனமருத்துவர்: வாம்மா சீதா. உன் கணவர் வந்திருக் கிரு.ா ? சீதா : அவர் வரவில்லை டாக்டர். நான் எவ்வளவோ மன்ருடினேன்... மனமருத்துவர் : ஒகோ, அவருக்கு நம்பிக்கை ஏற்பட வில்லையா? சரி சரி, அவரை வற்புறுத்திக் கூட்டி வந்தாலும் அதனுல் பலன் ஏற்படாது. சீதா : ஏன் டாக்டர் ? மனமருத்துவர் : கோயாளியின் முழு ஒத்துழைப்பும் இருந்தால்தான் இந்த முறையில் பலன் கிடைக்கும். அவருக்கு விருப்பமில்லையென் ருல் அவர் மனத்திலே எதிர்ப்புக் கிளர்ச்சிகள் தான் மேலோங்கி கிற்கும். அந்த நிலையிலே எனது சிகிச்சை முறை பயன்படாது. அவர் வத்தாலும் அவர் மனத்திலுள்ள கோளா றின் காரணத்தை அறிந்துகொள்ள முடியாது. சீதா (விசனத்தோடு) , நான் உங்களைத்தான் பூரணமாக நம்பியிருந்தேன். இனி என்ன செய்வேன் ? மனமருத்துவர் : கவலைப்படாதே அம்மா. கொஞ்ச நாள் பொறுத்துப்பார். அதற்குள் உன் கணவர் மனம் மாறி இங்கு வரத் தாமாகவே விரும்பலாம். சீதா : ரஜா சீருவதற்குள் அவருக்குச் சுகமாகாவிட் டால் வேலையே போய்விடும். மனமருத்துவர் : என்ன செய்யலாம்? எல்லாம் செளக் கியமாக முடியுமென்று நம்புவோம்.