பக்கம்:மயில்விழி மான்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

மயில்விழி மான்

ஆகாச விமானம் புறப்பட்டுப் பஸிபிக் சமுத்திரத்தின் மேல் பறந்து போய்க் கொண்டிருக்கிறது. அந்த மாபெரும் சமுத்திரத்தின் அகலம், நீளம், ஆழம் ஆகியவை குறித்தும், அதன் விஸ்தாரமான நீர்ப்பரப்பிலே எத்தனை கோடானுகோடி ஜீவராசிகள் வாழ்ந்திருக்கின்றன என்பது குறித்தும் யோசனை செய்து கொண்டிருந்தேன். அது மட்டுமா? ஆதிகாலத்திலிருந்து எத்தனை எத்தனை வியாபாரக் கப்பல்கள் அந்தச் சமுத்திரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன! எத்தனை ஸ்பானிஷ் கப்பல்கள் மெக்ஸிகோவின் தங்கத்துடன் அந்தக் கடலின் ஆழத்தை அடைந்திருக்கின்றன. எத்தனை பிரிட்டிஷ் கப்பல்கள்! எத்தனை பிரஞ்சுக் கப்பல்கள்! முன்னொரு காலத்தில் தமிழர்கள் பெரிய பெரிய நாவாய்களை செலுத்திக் கொண்டு ஏழு சமுத்திரங்களிலும் பிரயாணம் செய்திருக்கிறார்கள். தமிழர்களுடைய கப்பல்கள் கூட அந்தச் சமுத்திரத்தின் அடியில் கிடத்தல் கூடும். அவற்றில் உள்ள செல்வங்களையெல்லாம் மட்டும் திரட்டிச் சேர்த்து எடுக்க முடியுமானால்?...

வ்வாறு நான் எண்ணமிட்டுக் கொண்டிருந்த போது, எங்கள் ஆகாச விமானம் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக ஆடத் தொடங்கியது. பெரியதொரு சுழற் காற்றில் அகப்பட்டுக் கொண்டதாகத் தெரிய வந்தது. பிரயாணிகளின் முகங்களில் கவலை குடி கொண்டது. அவர்கள் கவலை படுவதற்குக் காரணம் உண்டென்பதும் தெரியவந்தது. சுழற்காற்றின் மையத்தில் சிக்கிக் கொண்டால் விமானம் தப்புவது துர்லபம்; இந்த மையத்திலிருந்து தப்புவதற்காக