பக்கம்:மயில்விழி மான்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மயில்விழி மான்

மேலும் அவருடைய சீடர்களிடம், இனி எளிய இனிய நடையிலேயே பாடல்கள் எழுதாமல் கரடு முரடான கொடுந்தமிழில் கவிதைகள் எழுதச் சொன்னார். சீடர்கள் அப்படியே செய்து பார்த்தார்கள், அதிலும் பயனில்லை. தமிழை எவ்வளவு கரடு முரடு ஆக்கினாலும் அதன் சுவை என்னவோ குன்றவில்லை. ஆகவே, அகஸ்தியரும் தமது தோல்வியை உணர்ந்து பொதிகை மலையை விட்டுப் புறப்பட்டு வடக்கே வித்தியமலைக்குத் தென்புறத்தில் தண்டகாரண்யத்தில் வசிக்க வேண்டியதாயிற்று.

இந்தத் தீவில் இப்போது வசிக்கும் மக்களின் மூதாதைகள் ராட்சஸர்களுக்கு இரையாக விரும்பாமல் கொற்கையென்னும் துறைமுகத்துக்கு அருகில் ஒரு பெரிய காட்டில் ஒளிந்து வாழ்ந்தார்கள். அதே சமயத்தில் அவர்கள் தாங்களிருக்கும் இடத்தை எப்படியும் அரக்கர்கள் கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணி, ஒரு பெரிய மரக்கலம் கட்டி வந்தார்கள். ஏதாவது அபாயம் நேர்ந்தால் கப்பலில் ஏறிக் கடல் கடந்து வேறொரு நாட்டில் குடியேறிவிடலாம் என்று எண்ணியிருந்தார்கள்.

ராவணனுடைய ஒன்றுவிட்ட தம்பியாகிய கரன் என்னும் ராட்சஸன் தண்ட காரண்யத்தை யொட்டி ஜனஸ்தானம் என்னுமிடத்தில் தன் தோழர்களுடன் வசித்து வந்தான். கரனுக்கு முரன் என்றொரு மகன் இருந்தான். அவன் தமிழகத்தில் மிச்சம் மீதித் தமிழர்கள் இருக்கிறார்களா என்று தேடி வந்தான். கடைசியில் கொற்கைத் துறைமுகத்துக்கருகில் காட்டில்