பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகக்கணியம்

10

அகத்துறுப்பு



வசதிகள். infrastructure. (எ.டு) கட்டிடங்கள், நீர், மின்சாரம். அந் நிறுவனத்திற்கு நேர்த்தியான கட்டமைப்பு உள்ளது. The organi sation has a fine infrastructure.

அகக்கணியம் - உயிரணுவின் உட் பொருள் endoplasm. ஒ. புறக்கணியம் This is the inner part of the cell.

அகக்கரு வளர்ச்சி - உயிர் கருப்பையில் வளர்தல். viviparity. This is the growth of a young one inside the womb.

அகக்கலப்பு - ஓர் இனத்திற்குள்ளே நடைபெறும் திருமணம், Endogamy. Marriage within one's own group, pollination between two flowers of the same plant; the union of female gametes.

அகக்காழ் - வயிரமுள்ள மரம், heart of the wood. This wood if present in old trees.

அகக் கொழுநீர் - உட்செவியிலுள்ள நிணநீர் endolymph. This is found in the inner ear.

அகச்சட்டகம் - உள்ளெலும்புக் கூடு, endoskeleton. This is the framework of human body.

அகச்சிதல் - பூக்காத் தாவரவித்து. விதை முன்னோடி, endospore of plant. This is the fore runner of seed.

அகச்சிவப்புக் கதிர்கள்- கண்ணிற்குப் புலப்படா ஒளிக்கதிர்கள், infrared rays, வானிலை ஆராய்ச்சியிலும், வான வெளி ஆராய்ச்சியிலும் பயன்படுவது. They are used in weather forecast and space research.

அகச்சீரமைப்பு - நிறுவனத்தின் உள்ளே நடைபெறுவது. internal Construction, தற்பொழுது அகச்சீரமைப்பு நடைபெறுகிறது. Now internal construction is going on.

அகச்சுரப்பி இயல் - தொண்டைச் சுரப்பி முதலிய உட்சுரப்பிகளை ஆராய்வது. பா. புறச்சுரப்பி, endocrinology. This is the study of endocrine glands like thyroid.

அகச்சுரப்பிகள் - தம் சுரப்புகளை நேரிடையாகக் குருதியில் சேர்க்கும். (எ.டு) தொண்டைச் சுரப்பி, மூளையடிச் சுரப்பிகள் முதலியவை. ஒ. புறச் சுரப்பிகள். Endocrine glands like thyroid and pituitary which pour their secretions directly into blood.

அகட விகடம் - கோமாளிச் செயல், antics. The term denotes the humorous acts of a clown.

அகடு - வயிறு, abdomen. எல்லாப் பாலூட்டிகளுக்கும் வயிறு உண்டு. All mammals have abdomen.

அகத்தி - கொடிக்காலில் வெற்றிலை க்கு அணைகாலாக வளர்க்கப்படும் மரம். West-Indian pea-tree grown as support to betelnut wine.

அகத்திக் கீரை - உண்பதற்குரிய அகத்தி மரக்கீரை . West-Indian pea trees' leaves fit for cooking and eating.

அகத்திணை - அக ஒழுக்கமாகிய காதல் பற்றிக் கூறுவது. Love, as a mental experience of lovers. ஒ. புறத்திணை.

அகத்துறுப்பு - உடலின் உள் உறுப்புகள். (எ.டு) இரைப்பை, குடல் முதலியவை. internal organs like stomach and colon.