பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

RJ EU TI & Q & (B If !

குறுநடை கடந்து கூடி ஒன்ருய்க் கோழியின் குஞ்சுகள் குலவி யிருந்தன ; எச்சில் இலைகள் இன்னும் பற்பல மிச்சில் எல்லாம் மிதந்து கிடக்கும் குப்பைக் கோட்டில் கூர் உகிர் விரலால் கிளறிக் கிளறிக் கிடைத்ததைக் கோழி குஞ்சுகட் களிக்கக் கொக்கரித் ததுவே , பறந்து வந்தன பச்சிளங் குஞ்சுகள், மொய்த்திடும் அவற்றுள் முக்தித் திறக்கும் மென்சிறு வாயுள் வன்பெரு மூக்கால் கொஞ்சிக் கொஞ்சிக் கொடுத்தது கண்டேன்; அடடா அடடா! அன்னேயின் அன்புக் கேதடா உலகில் ஈடும் எடுப்பும் ? அஃறிணைப் பிறப்பும் அன்னேயின் அன்பால் பின்னிேக் கிடக்கும் பெருகிலை உணர்ந்தேன் ; அவைகள் யாவும் அஞ்சிட ஒர்குரல் வானிற் கேட்டது; வட்ட மிட்ட

பருந்து வந்து பாய்ந்தது; கோழி

3O