பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 337 ஹரஹர என்று (உன்னையே நினைந்து) இப் பெண் படுகின்றபாடு சொல்லும் தரமல்ல (சொல்வது மிகக்கஷ்டம், கஷ்டம்); அமுதமும் மயிலும் போன்ற (என் மகள்) இந்த நிலை யெல்லாம் கருதி, எல்லாரோடும் பகைமைப் போர் புரிவாள்; மயக்கம் ஏற, மயக்கம் ஏற.நிறைய ஊர்ப் பேச்சுக்களும் பிறக்க, (இவள் மிகவும்) மெலிந்து போனாள். (இவள்) திக்கற்றவள், (இவள்) தலைவிதி இங்ங்ணம் இருந்த போதிலும் (இவள்) உன்னை விட்டு விலகல் அரிது (விலகமாட்டாள்); (அல்லது இவளை நீ விலக்கல் அரிதாகும்); (இவளை) அடிமை கொள்வது உனது பாரம்; பொறுக்க முடியாத (ஒரு தன்னந் தனியளாம் இவளை அணைய (முருகா! நீ) இனிமையுடன் ஒகார உருவமுள்ள மயில் என்னுங் குதிரைமீது வந்தருளுக. பசுக்கள் கூட்டமாய் வர மலை நிழலிலே ஒப்பற்ற குளிர்ச்சி தரும் மருத மரத்தோடு பொருதற்கு வந்த சகடு (வண்டியை) உதை செய்து, மாயமாகத் (திடீரென வந்த) மழை பொழிதல் நிலை குலையும்படி (கோவர்த்தனர்) மலையைக் குடையாகவே எடுத்துப் பிடித்த தாமரை பன்ன திருக்கரங்களை உடையவனாகிய கண்ணபிரானது (திருமாலின்) மருகனே! நிர்மலி, முக்கண்ணி, ஒளி வீச எழுந்தருளும் குமரி, கவுரி, பயிரவி, பாம்பை ஆபரணமாகப் பூண்டுள்ள நாரி (தேவி), மூவுலகங்களுக்கும் தலைவி, நெருக்க முள்ள (இமய) மலையரசன் வளர்த்தருளிய மகளாம் ஒளி நிறைந்த உமையாள் அருளிய பாலனே! கடலும், மலையும், அசுரர் கூட்டமாம் பெரிய சேனைகளும் தவிடு பொடியாகவும், தேவர்களுடைய துயரம் நீங்கவும், வேலா யுதத்தைச் செலுத்திப் போர் செய்த தாமரை போன்ற கைகளை உடைய முருக! நான்கு வேதங்களையும் வல்ல (ஞான) ஒளியினருக்கு அணிகலமாக விளங்குபவனே! மயில் வீரனே!