காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 13 புயங்களை உடையோன் - என்னும் வகையில் சொற்களைக் கற்று, பிற சம்பந்தமான சொற்களைக் கற்கவேண்டும் என்கின்ற பற்று ஒழிந்து, அர்த்தத்திலே கரும்பு போல இனித்து நிற்கும் குணம் அமையச் செய்யுள்தோறும் பொதியப்படுவதாகிய ஒரு செல்வத்தை (அல்லது, அர்த்தத்திலே கரும்புபோல நிற்கும்படியாக ஒவ்வொரு பொருள் தோறும் ஒவ்வொரு சொற்பொருள்தோறும் (இனிமை) புகுத்தப்பட்ட ஒரு செல்வ வாக்கைப் பெறுவேனோ! நெருப்பை வீசும் சிவந்த கண்களை உடைய திக் கஜங்கள் எட்டும் தன்னோடு சண்டை செய்ய (தன் மார்பிற்பட்டு) அரிபட்ட (ஒடிந்துபோன) எட்டுக் கொம்புகளின் துண்டு களாம் கொம்புகளை அணிந்துகொண்ட அழகிய ஒப்பற்ற மார்பினன் - பலத்துடனே அடியோடு பற்றிப் பொன்மலை (கயிலைமலையைப்) பிடுங்கப் புகுந்தபொழுது அந்த மலை போன்ற புயங்கள் பத்துப்பத்தும் (இருபதும்) நெரிப்பு உண்டவனும், மேம்பட்ட தனது (சிவனது) ஒப்பற்ற (அல்லது ஒரு அங்குவிட விரலின் (பெருவிரலின்) எள்ளின் பல் அத்தனை வரிசைக்கும் (எள் நுனி அளவுக்கும்) ஈடாகாதவனும், வீர உக்ரம் கொண்ட அரக்கனும், பத்து முகத்தினனும், ஆகிய ராவணனுடைய கைக்குக் கேட்கம் (வாள் ஒன்றை அளித்த பெரியராம் சிவனும் (அவரது) தலைவி (மனைவி-பார்வதியும்) (அவரது) பக்கத்தில் ஒன்றுபட்டு (சேர்ந்து) இருக்கும் - மலை (அர்த்தநாரீசுரர் விளங்கும் மலை) யாகிய திருச்செங்கோடும், தெற்கே உள்ள உத்தம தலமாம் குருமலை (சுவாமிமலையும், திருத்தணி கையும்-(தாம் வீற்றிருக்கும் தலங்களாகப்) பெற்றுக் கச்சியில் நிற்கின்ற பெருமாளே! (இக்கெணநிற்கும் பொருள் பொத்தப்பட்ட தொரத்தம் பெறுவேனோ)
- சிவபிரான் ராவணனுக்குக் கட்கம் (வாள்) தந்தது
"எவ்வகைப் படையும் வெல்லும் சந்திரவாளும் ஈந்தான்" கம்ப ராமா. வரையெடுத்த 75. f சயிலம்-திருச்செங்கோடு.