பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/765

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

758 முருகவேள் திருமுறை (10-திருமுறை (7) முககோடி நதி - கங்கை வேளைக்காரன் வகுப்பு, அடி 7 குறிப்பு, பக்கம் 328. குருகு - வெண்மை (திவாகரம்): முகில் குருகு ஓடிப் பரவுதல்) வெண் முகிலாய்ப் பரவுதல் "ஒளிகொள் வெண் முகிலாய்ப் பரந்தெங்கும் பெய்யுமாமழை" சுந்தரர் 7.55.2. நீலகிரி - திருத்தணி - சீர்பாத வகுப்பு பக்கம் 302 குறிப்பு. (8) தடமயில் தடக்கொற்ற வேள் மயில்" . கந்தரலங் காரம் 96. 5. சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி நயதுல்ய சோம வதன *துங்கத்ரி, ஆலதரி கங்காளி சிவகாம சுந்தரி பயந்த நிரைசேர் ஆதிநெடு முதண்ட அண்டபகி ரண்டங்கள் யாவுங் கொடுஞ்சிறகினால் 'அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே, அணைக்குங் கலாப மயிலாம் "நீதிமறை ஒதண்ட முப்பத்து முக்கோடி நித்தரும் பரவு கிரியாம் 'நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன் நிர்வியா குலன்சங்குவாள் "மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன் மாதவன் முராரி திருமால் 'மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன் வரமுதவு வாகை மயிலே. 1. சோதி - சோதிஉருவினளாய் (அல்லது ஒளிஉள்ள), இம வேதண்டம். இமயமலையிடத்தே, கன்னிகையர் - மாதர்கள், தந்த தோழியராய்ப் பாதுகாத்துத் தந்த அபிநயம் அலங்களிப்புள்ள, துல்ய சுத்தமான, சோமவதன சந்திரன் போன்ற தண்ணொளி வீசும் முகமுள்ள,